INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, December 11, 2020

SRIDHAR BHARATHI'S POEM

 A POEM BY

SRIDHAR BHARATHI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



THE SEA AND THE BOY

The drawing teacher gave his students the homework of
drawing the sea and colouring it.
The next day the students submitted
their respective drawings.
The teacher scrutinized and evaluated
each one of them.
When he came to the drawing of the new student -
an inhabitant of Dhanushkodi
the sea he had drawn shook him to the core.
Calling the student concerned
when he enquired,
“Our sea would be like this only”,
answered the boy.
“It’s alright, but, can sea be in this shade?’
The eyes of the boy offering a teardrop
in response to the teacher’s query
wore the same shade of the sea.

கடலும் சிறுவனும்
==================
ஓவிய ஆசிரியர் தம் மாணவச் செல்வங்களுக்கு வீட்டுப்பாடமாய் கடல்
வரைந்து வண்ணம் தீட்டிவருமாறு பணித்தார்
மறுதினம் மாணவச்
செல்வங்கள் அவரவர் தீட்டிய சித்திரங்களை மேசைமீது சமர்ப்பித்தனர்
ஓவியங்கள் அனைத்தையும் உற்றுநோக்கி மதிப்பிட்ட ஆசிரியர்
புதிதாய் வகுப்பில் சேர்ந்த தனுஷ் கோடி மாணவன் வரைந்த கடலின் சித்திரம் கண்டு
அதிர்ந்து போனார்
அவனை அழைத்து அதுகுறித்து வினவிய பொழுது ‘எங்கள் கடல் இப்படித்தான்இருக்கும்’ என்றான்
‘அது போகட்டும் கடலின் நிறம்
இப்படியா இருக்கும் ?’ என்ற ஆசிரியருக்கு மறுமொழியாய்
கண்ணீர்த்துளியைத் தந்த அவன் கண்களின் நிறமும் அவன் தீட்டிய கடலின்
நிறமும் ஒன்றுபோலவே இருந்தது.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JULY - SEPTEMBER, 2024