TWO POEMS BY
PALAIVANA LANTHER
Who are you – do you know that
When I forget who I am
I will remember thee
They would talk a lot about you only
And then would forget it all too easily
Just the way you have forgotten them
Anyone not knowing anyone is
indeed no loss to none.
Yet they would be searching for someone
on and on
Would obtain someone in someone’s reflection
I You They
You They I
They and We
Others be damned for all I care
You be clear
In particular
Forget not to forget, My Dear.
பாலைவன லாந்தர்
நீ யார்
நான் யாரென்று எனக்கு தெரியாது
நீ யாரென்று உனக்கு தெரியுமா
நான் யாரென்று மறந்துவிட்ட போது
உன்னை நினைவுபடுத்திக் கொள்வேன்
அவர்கள் உன்னைப் பற்றி தான் அதிகமாக பேசுவார்கள்
பிறகு மறந்து விடுவார்கள்
நீ அவர்களை மறந்ததை போலே
யாருக்கும் யாரையும் தெரியாமல் போய்விடுவதால்
யாருக்கும் பாதிப்பில்லை
ஆனால் எல்லோரும் யாரையோ தேடிக்கொண்டே இருப்பார்கள்
யாருடைய பிம்பத்திலோ யாரையோ அடைவார்கள்
நான் நீ அவர்கள்
நீ அவர்கள் நான்
அவர்கள் மற்றும் நாம்
மற்றவர்கள் எப்படியோ போகட்டும்
நீ தெளிவாக இரு
முக்கியமாக
மறந்துவிடுதலை மட்டும் மறக்காதே
The glow falls upon the dogs hiding in the park.
Blinking and dispersing
the dogs bark and chase the Moon.
The crows with their mating disrupted
throw tiny twigs at the dogs
In the front mirror of those driving wagons midnight
the Moon leaps reveling
The light pervading in a bus
alights after three stops.
It pounces on the official extending hands
to receive bribe.
Enraged he arrests the Moon.
Put behind bars the Moon counts it all.
One Three Five
Along the highways the Kulfi-vendor rings the bell.
The prison-warder buys Kulfis through the window.
The Moon’s tongue turns all dry.
The wind saves the Moon and bails it.
The Moon walking on the road so worn out
is invited by Ilayaraja to join Music
Feeling a little elated the Moon accepts.
When the night comes to a close
growing more nostalgic about its abode
It runs fast.
When it leapt inside the house
a little girl cautioning ‘Shshhhh…’
contains it inside jar-water.
At dawn on sunshine spread courtyard
She sprinkles the water and washes her face.
Kissing the sun at micropoint the Moon
goes to sleep.
Night would come back.
நிலவு
இரண்டாமாட்டம் பார்த்துவிட்டு தள்ளாடியபடியே தாமதமாக வருகிறது நிலவு
பூங்காவில் பதுங்கிக் கிடந்த நாய்களின் மீது பாய்கிறது ஒளி
கண்கள் கூசிக் கலைந்த நாய்கள்
குரைத்தப்படி நிலவை விரட்டுகின்றன
மையல் தடைபட்ட காகங்கள் நாய்களின் மீது சிறிய குச்சிகளை வீசுகின்றன
நள்ளிரவு வாகனம் ஓட்டுபவர்களின் முகப்புக் கண்ணாடியில் துள்ளித் துள்ளிக் குதிக்கிறது நிலவு
மகிழுந்து ஒன்றில் பரவும் நிலவொளி
மூன்று நிறுத்தங்கள் தள்ளி இறங்கிக் கொள்கிறது
கையூட்டு பெற கைகளை நீட்டும் அதிகாரியின் மீது பாய்கிறது
கோபத்துடன் நிலவை சிறைப்பிடிக்கிறார்
நிலவு கம்பி எண்ணுகிறது
ஒன்று மூன்று ஐந்து
நெடுஞ்சாலையில் குல்பி ஐஸ் விற்பவர் மணி அடிக்கிறார்
சிறைக்காவலாளி சன்னல் வழியாக செல்கின்ற குல்பிகளை வாங்குகிறார்
நிலவுக்கு நாக்கு வரண்டுப் போகிறது
காற்று நிலவை காப்பாற்றி ஜாமீன் எடுக்கிறது
சோர்ந்தபடி சாலையில் நடக்கும் நிலவை
இளையராஜா இசையில் இணையுமாறு அழைக்கிறார்
கொஞ்சம் மகிழ்வோடு இசைந்து கொடுக்கிறது
இரவு முடிவுக்கு வரும்போது வீட்டின் நினைவு அதிகமாகி வேகமாக ஓடுகிறது
வீட்டுக்குள் பாயும் நிலவை ஷ்ஷ்ஷ் என்று சொல்லி
குடுவைத் தண்ணீருக்குள் அடைத்து வைக்கிறாள் சிறுமி
விடிந்தவுடன் சூரியன் பரவிய முற்றத்தில் தெளித்து
முகம் கழுவுகிறாள்
மைக்ரோ புள்ளியில் சூரியனை முத்தமிட்டு உறங்கிப் போகிறது நிலவு
மீண்டும் இரவு வரும்
பாலைவன லாந்தர் – இந்தியா
No comments:
Post a Comment