INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, December 10, 2020

YAVANIKA SRIRAM'S POEMS(2)

 TWO POEMS BY

YAVANIKA SRIRAM

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



(1)

THE EARTH SANS LUMINANCE
‘I ‘ said the voice of god
The tiny grains slipped off during rainy season
are sprouting.
Through the deep valley
the cloud had commenced its kind journey.
The rocks turn silent once again
Lacking the phosphor coating
for reflecting the crystal clear sky
the earth lay dismantled.
The water sources keep erasing crisscross the actual that spread in front
Through its saliva in abject detachment
Was alighting the spider’s concern.
Those who had been telling one and all that they were living
had already gone.
I believed nothing.
The ashes of cigarette I was tapping off
into an ant hole
From the century-old tree of a massive jungle
some birds came carrying some peril
Atonce I thought of breathing my last
Is He
rising and going along with the one
who had patted his shoulder asking for fire
to light his tobacco pipe
Me?

Yavanika Sriram

(*TRANSLATOR'S NOTE: இரசமற்ற பூமி என்பதில் பயன்படுத்தப்பட்டுள்ள இரசம் என்ற சொல்லின் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளை ஆங்கிலத்தில் கொண்டுவருவது மிகவும் சிரமமான ஒன்றாகத் தோன்றுகிறது. ஏதோ என்னால் முடிந்தவரை மொழிபெயர்த் திருக்கிறேன்!)

இரசமற்ற பூமி

நான் என்றது கடவுளின் குரல்
மழைக்காலத்தில் தவறி விழுந்த சிறுமணிகள்
முளைவிட்டுக் கொண்டிருந்தன
ஆழ்ந்த பள்ளத்தாக்கின் வழியே மேகம்
தன் கனிவான பயணத்தைத் துவக்கியிருந்தது
மீண்டும் பாறைகள் மௌனிக்கின்றன
துல்லிய வானத்தைத் துலக்கமாய்ப் பிரதிபலிக்க
இரசமின்றிச் சிதைந்து கிடந்தது பூமி
நீர் நிலைகள் எதிர்விரியும் ஸ்தூலத்தை
அழித்தழித்துக் காட்டிக் கொண்டன
தன் எச்சிலின் வழியே எதிலும் பிடிமானமற்று
இறங்கிக் கொண்டிருந்தது சிலந்தியின் கரிசனம்
உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதாக எல்லோரிடமும்
சொல்லிக் கொண்டிருந்தவர்கள் போய்விட்டிருந்தார்கள்
எதையும் நம்பவில்லை நான்
சிகரெட்டின் சாம்பல்களை ஒரு எறும்புக்குழியில்
தட்டிவிட்டுக் கொண்டிருந்தேன்
ஒரு பெருவனத்தின் நூற்றாண்டு மரத்திலிருந்து
சில பறவைகள் ஏதோ அபாயத்தைச் சுமந்து வந்தன
உடனே நான் இறக்கவேண்டுமென நினைத்தேன்
தன் புகைப்பானுக்காய் தோளைத் தட்டி
நெருப்புக் கேட்டவனோடு
எழுந்து போய்க்கொண்டிருப்பது நானா?

கடவுளின் நிறுவனம் 2004


(2)

GOOD PRICE FOR FISH
ON EASTER DAY
For how long to bear the Earth
Throwing it straight in front Hercules gave it a nice kick.
It went to the Milky Way and settling in its orbit
journeyed with a smile sarcastic.
A golden plank that had till then seeped out
of a tiny hole of the earth slowly upon him
and turning frozen,
a marine fish startled and tumbling down
when he kicked,
while at sleep screaming as falling into abyss
and clinging to his hip, a tribal woman hanging,
Saying he wanted to go to Greece his native place
lifting both his hands he stretched out.
Arriving he went straight to Vatican in Rome
and handed over the tribal woman safely.
Giving the golden plank to the Jew of Alps Mountain
he asked for a statue in return.
In all the marketplaces of the entire week
his fish fetched real good price.
Joyously he drank his wine bottles.
Seeing the earth he had kicked being lifted
thrown up and kicked by any and everyone
He shouted in joy with tears swelling.
Venus, appearing from nowhere, behind
saying “Oh, you have come, my son’ stroked his shoulders
so soothingly with her hands relieving them of pain,
pressing her lips upon those of his
fulfilled thousands of years.
‘’Pleasant load’ murmured Hercules.
ஈஸ்டர் நாளில்மீனுக்கு நல்ல விலை
எத்தனைநாள்தான் சுமப்பது பூமியை
தன்முகத்திற்கு நேராக அதைத்தூக்கிப்போட்டு
ஒரு உதை விட்டான் ஹெர்க்குலிஸ்
அது பால்வீதியின் சுற்றுப்பாதையில் போய்க் கச்சிதமாக உட்கார்ந்து கொண்டு
இளக்காராமாய்ச் சிரித்தபடி பயணித்தது
அதுநாள்வரை பூமியின் சிறு துளையிலிருந்து அவன் மீது மெதுவாய்க்கசிந்துறைந்த ஒரு தங்கப் பாளமும்
உதைத்ததில் திடுக்கிட்டுக் தவறி விழுந்த கடல் மீன் ஒன்றும்
உறங்கும் போது
பாழில் விழுவதாய் அலறி அவனது இடுப்பைக் கவ்விப் பற்றியபடி ஒரு பழங்குடிப்பெண்ணும் தொங்க
தான் பிறந்த நகரமான கீரீஸிற்கு
போகவேண்டுமென இருகரம் உயர்த்தி
சோம்பல் முறித்தான்
வந்தவன் நேராகப் போய் ரோம் வாடிகனில் பழங்குடிப் பெண்ணைப் பத்திரமாக ஒப்படைத்தான்
தங்கப்பாளத்தை ஆல்ப்ஸ் மலை யூதனிடம் தந்து விட்டு மறுதலையாகத் தனக்கொரு சிலை வேண்டிக்கொண்டான்
வாரம் முழுதுமான அனைத்துச்சந்தைகளில் அவன் மீனுக்கு நல்ல விலை
மகிழ்ச்சியாகஒயின் போத்தல்களை குடித்தான்
அங்கே தான் உதைத்து விட்ட பூமியை
தன்னிஷ்டத்திற்கு ஆளுக்கு ஆள்தூக்கிப் போட்டு எத்தி விளையாடுவதைத் கண்டு
கண்ணீர்மல்க ஆனந்தச் சிரிப்பில் கூக்குரலிட்டான்
எங்கிருந்தோ பின்புறமாய் வந்த வீனஸ்
வந்துவிட்டாயா மகனே என்றுஅவனது தோள்களில் தன் கரங்களைக் கொண்டு வலிபோக இதமாகத்தடவி
தனது இதழ்களோடு அவனிதழ்களைப் பொருத்தி ஆயிரமாயிரமாண்டுகளை நிறை செய்தாள்
சுகமான சுமை என்று முணுமுணுத்தான் ஹெர்குலிஸ்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE