A POEM BY
J.WAHABDEEN
This little boy’s playful activities
During my interval after hours of work
the reason for the wind becoming my mother
singing lullaby to make me sleep
is the shade spread by this Vaagai tree.
Shade, Oh what a soft spread
of shade!
The wind is pouring sleep into my eyes
but how can I close them
The king of Vaagai tree
has surrendered his very self
to this child.
Not turning angry
raging furiously
breaking the branches,
beating and chasing the boy
Oh no - never
What a wonderful love this is
watching this child
coming from somewhere
climbing up and down
indulging in many a sweet mischief
lilting and leaping
playing happily
Oh how this Vaagai enjoys it all
shaking its leaves in
hearty laughter!
This is a child a child indeed
little squirrel so lovely
and not only that but also crows
sparrows insects and all
co-exist in harmony here.
None claims the tree one’s own
No unrest erupts; riots none
The tree grown wide and tall
for the wellbeing of one and all
Nice it would be to have a world
for leading life much like Vaagai, my friends!
நான் வாசித்த வாகை மரம்
.................................................
வாகை மரத்து உடல் முழுவதும்
இந்தப் பிள்ளையின் விளையாட்டு நிகழ்ச்சி
எனது பணி முடிந்த இடைவேளையில்
காற்று என்னைத் தாலாட்டித் தூங்க வைக்க
தாயாக மாறியதற்கு
இந்த வாகை நிழல்தான் காரணம்.
நிழலோ நிழல் கொழுத்த நிழல்.
தூக்கத்தை கண்களுக்குள்
காற்று
ஊற்றிக் கொண்டிருக்கிறது.
கண்களை எப்படி நான் மூடுவேன்
இந்தப் பிள்ளையின் விளையாட்டு அழகோ அழகு.
வாகை மரத்து அரசன்
தன்னையே அர்ப்பணித்துவிட்டான்;
இந்தப் பிள்ளைக்காக
கோபம் கொண்டு
கொழுந்துவிட்டெரிந்து
கிளைக் கைமுறித்து
அடித்துத் துரத்தாமல்...
என்ன ஒரு நேயமிது..!
எங்கிருந்தோ வந்த பிள்ளை
ஏறியிறங்கி
என்னென்னமோ குறும்புகள் செய்து
துள்ளிக் குதித்து
விளையாடும் காட்சியில்
இலைகளைக் குலுக்கி
சிரித்து மகிழ்கிறதே.!
பிள்ளை இது பிள்ளை அழகான அணில் பிள்ளை
பிள்ளை மட்டுமா இங்கு?
காக்கை குருவி பூச்சிகளும்
கலந்து மகிழ்ந்து ஒன்றாய் வாழுதடா.
எனக்கு மட்டும் இந்த மரமென்று
எதுவும் சொல்லவில்லையடா!
எந்தக் கலவரமும் இங்கு எழவில்லையடா!
எல்லா உயிர்களும் மகிழ்ந்துவாழ
ஓங்கி உயர்ந்து பரந்து வளர்ந்த மரமிதடா..!
நான் வாசித்த வாகை மரம்போல்
நாம் வாழ ஒரு பூமி வேண்டும்.
ஜே.வஹாப்தீன்
No comments:
Post a Comment