INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, December 10, 2020

RAMESH PREDAN'S POEMS(2)

 TWO POEMS BY

RAMESH PREDAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



1.THE IMMORTAL MAN
They announced that I have died.
Then they buried me.
Inside the soil in a fragrant coffin
how long to remain lying like this
Moving my limbs a little
I lay sideways
I could roll over and stretch with my face down.
When the din and noise of traffic subsided
I could realize it to be night
The daytime earth is scorching
and it is too sweaty inside the box.
I who calculates the days being inside dark
Oh how can you realize my state of mind
Thinking of any and everyone
recollecting things close to my heart
is my only pastime.
Still for how many months
how many years
how many eons
I remain lying thus.
If I die
my body would rot decompose
and turn into soil.
Then there won’t be this burden
of loneliness
But
when am I to depart
How to breathe my last
Who would give me release
That the Son of God never dies
who to tell these dunces
Nevertheless
I won’t emerge out of the burial pit
on my own
Let my Father come
Let him dig me out himself
Till that time I will remain thus.

[TRANSLATOR'S NOTE: கவிதையின் கடைசி வரியை மொழிபெயர்ப்பில் தற்போது சேர்க்கவில்லை. சுற்றிலுமுள்ள புயல், வெள்ளம். கவியின் வாக்கு பலித்துவிட்டால்... என்ற பயமே காரணம். பின்னர் சேர்த்துவிடுகிறேன். ]

RAMESH PREDAN POEM
மரணமற்றவன்
--------------------
நான் செத்துவிட்டதாக அறிவித்தார்கள்
பிறகு நல்லடக்கம் செய்தார்கள்
மண்ணுக்குள் வாசனை கமழும் பெட்டிக்குள் நான்
எத்தனை நாட்களுக்குத்தான் இப்படியே
படுத்தபடியாகக் கிடப்பது
கையைக் காலை அசைத்து
ஒருக்களித்துப் படுத்தேன்
புரண்டு குப்புறப்படுக்கவும் முடிந்தது
வாகனங்களின் ஓய்ச்சல் அடங்கிய நேரம்
இரவாக என்னால் அறிய முடிகிறது
பகல் பூமி தகித்துப்
பெட்டிக்குள் புழுக்கமாக இருக்கிறது
இருட்டுக்குள் இருந்துகொண்டு நாட்களைக் கணக்கிடும்
என் மனநிலையை உன்னால் எப்படி உணர முடியும்
எல்லாரைப் பற்றியும் நினைத்துக்கொள்வதும்
மனசுக்குப் பிடித்தமானவற்றை எண்ணி மகிழ்வதுமே
எனக்கான பொழுதுபோக்கு
இருந்தாலும் இப்படியே எத்தனை மாதங்களுக்கு
எத்தனை ஆண்டுகளுக்கு யுகங்களுக்கு
நான் படுத்தபடியாகக் கிடப்பது
செத்துவிட்டால் உடலழுகி மக்கி மண்ணாகிவிடும்
பிறகு இந்தத் தனிமைச் சுமையில்லை எனினும்
எப்போது நான் சாவது
எப்படி நான் சாவது
எனக்கு யார் எப்படி விடுதலை தருவது
தேவகுமாரன் மரிப்பதில்லை என்பதை
மடையர்களுக்கு யார் சொல்வது
ஆனாலும் புதைகுழிக்குள்ளிருந்து
நானே வெளிப்படமாட்டேன்
என் தந்தை வரட்டும்
அவனே என்னைத் தோண்டி எடுக்கட்டும்
அதுவரை நான் இப்படியே இருப்பேன்
இந்நகரத்தைக் கடல் கொள்ளும்வரை.


2.CAT THE METAPHOR


A wall between you and me
A cat on the wall
We both nurture the thought of killing the cat.
That it knows what we think
the cat’s eyes reveal in all innocence.
In our deal of having the wall smashed a little
and thereby making room for an entrance
in the door that someone banged shut
The cat’s tail is caught.
The face of its terrible scream towards me
It’s writhing tail around eighteen inches long
facing you
Between you and me
a doorway all too shut
In the narrow gap of the door
a dried up skeleton.

2.

Starting from the upper rim of the round moon
the cat walks upside down in the lower rim.
In the light-blue hue sans clouds
the green cat is rolling the moon with its forelegs.
The red cat licking and drinking it
the moon oozes out of mouth-corner.
The black cat jumping into the moon
and getting dissolved
with its senses coming apart
remains there in patches .
Well, have you seen the cat’s eyes
There the moon’s interior
Well well
are you drawing or writing Cat
Have you seen Buddha with eyes opened
Buddha with eyes awakened is but Cat.

(3)

The cat walking upon the Piano.
The music fills the room and overflows.
The sound-filled path elongates.
In the hanging suspended walk of the cat
the space fills up to the rim
and brims.

4)

The night lies there as the cat.
Perplexed whether this poem is
about the night or the cat
I go on writing.
Newmoon Night
As tail sways
the Milky Way.
Eyes sprouting all over my body
squeal Miyaav.
In earthquake land slips off the feet.
Pouncing when I grasp the tail
swirling it and ascending higher
the land collapses into the earth
and ceases to be.
In the all too lonely earth
that which remains _
Myself or the Poem
Confused to the core looks on
the Night that has lost the name Cat.
That which is lost is just that _
name buried deep down.
Nothing else.

5.
Upon the infinitely extending compound wall
with glass pieces fixed
walks with composure
the word Cat.
Yes a Word.
If we pursue it a little
We will be able to read
it turning into a sentence
and in case a glass-piece gets inside
in the long-drawn movement of the sentence
the blood trickling sideways at compound wall
turning into poem.
If you expect it to be a poem about Cat
You would be disappointed.

(From the poem-collection கறுப்பு வெள்ளைக் கவிதை(BLACK AND WHITE POEM) published in 1999 by Agaram)

Ramesh Predan
பூனை என்கிற உருவகம்
====================
1.
உனக்கும் எனக்குமிடையே ஒரு சுவர்
சுவர் மீது ஒரு பூனை
பூனையைக் கொன்றுவிட
உனக்கும் எனக்கும் எண்ணம்
நம் எண்ணம் தனக்கும் தெரியும் என்பதை
வெகுளியாகக் காட்டும் அதன் கண்கள்
சுவரைக் கொஞ்சம்போல இடித்து
ஒரு வாசல் வைத்துக்கொண்ட
நமக்குள்ளான உடன்பாட்டில்
நம்மில் யாரோ அறைந்து சாத்திய கதவில்
வால் அகப்பட்டுக்கொண்டது பூனை
அதன் கொடூரமான அலறலின் முகம் என் பக்கம்
துடிதுடிக்கும் ஒருமுழ வால் உன் பக்கம்
உனக்கும் எனக்குமிடையே
அடைபட்ட ஒரு வாசல்
கதவிடுக்கில் காய்ந்த எலும்புக்கூடு
*
2.
வட்ட நிலாவின் மேல் விளிம்பில் ஆரம்பித்து
கீழ் விளிம்பில் தலைகீழாக நடக்கிறது பூனை
மேகமில்லா இளநீல வெளிச்சத்தில்
பச்சை நிறப்பூனை தனது முன்னங்கால்களால்
நிலாவை உருட்டிக்கொண்டிருக்கிறது
சிவப்புப் பூனை நக்கிக்குடிக்க
வாயோரத்தில் நிலா வழிகிறது
கறுப்புப் பூனை நிலாவில் குதித்துக் கரைந்து
புலன்கள் கழன்று திட்டுத்திட்டாக உறைகிறது
அதுசரி
பூனையின் கண்களைப் பார்த்திருக்கிறாயா
அதில் நிலாவின் உட்புறத் தோற்றம்
சரிசரி
பூனையை வரைகிறாயா எழுதுகிறாயா
கண் திறந்த புத்தரைப் பார்த்திருக்கிறாயா
புத்தர் கண்திறந்தால் பூனை
*
3.
பியானோ மீது
நடக்கும் பூனை
அறை நிரம்பித் தளும்புகிறது
ஓசை
ஒலி பொருந்திய பாதை நீள்கிறது
பூனையின் அந்தர நடையில்
வெளி நிரம்பித் தளும்புகிறது
(4)
பூனையைப் போல இரவு படுத்துக்கொண்டிருக்கிறது
இந்தக் கவிதை இரவைப் பற்றியதா
பூனையைப் பற்றியதா என்கிற குழப்பத்தோடே
எழுதிக்கொண்டிருக்கிறேன்
அமாவாசை இரவு
வாலாக அசைகிறது பால்வீதி
உடம்பெல்லாம் கண்களாகி விடைத்து
மியாவ் என்கிறது
நிலநடுக்கத்தில் பூமி கால்களைவிட்டு நழுவுகிறது
எம்பித் தாவி வாலைப் பற்ற
வால் முனை சுழற்றி மேலேற
பூமிக்குள் சரிந்து மடிகிறது நிலம்
தனித்த பூமியில் மீந்து நிற்பது
நானா கவிதையா என்ற குழப்பத்தோடு பார்க்கிறது
பூனை என்ற பெயரை இழந்த இரவு
மண்ணில் புதைந்தது பெயர் மட்டுமே
வேறில்லை
5.
கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்டு
முடிவற்று நீளும் மதில் மீது
நேர்த்தியாக நடந்து செல்கிறது
பூனை என்ற ஒரு சொல்
ஆம் ஒரு சொல்
அதைக் கொஞ்சம் பின்தொடர்ந்தால்
அது ஒரு வாக்கியமாவதையும்
வாக்கியத்தின் நீண்ட அசைவில்
கண்ணாடிச் சில்லொன்று பொத்துவிட்டால்
மதிலின் பக்கவாட்டில் வழியும் குருதி
கவிதையாவதையும் வாசிக்கலாம்
அது பூனையைப் பற்றிய கவிதையாக இருக்குமென்று
நீங்கள் எதிர்பார்த்தால் ஏமாந்துபோவீர்கள்
*
(கறுப்பு வெள்ளைக் கவிதை/ அகரம்/1999.)

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JULY - SEPTEMBER, 2024