INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, December 11, 2020

S.BRINDHA'S POEM

 A POEM BY

S.BRINDHA


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


GIRLHOOD AND THE GREEN TEA

The little girl in the patio of
grandma’s Shankarankoil house
wearing a cotton full-skirt
in the hue of dense purple-pink
and playing the game of pebbles _‘Thattaangal’
I keep searching within.
The Time of time has placed her
in a big city.
In a multi-storeyed building
on the fifth floor
wearing sleeveless shirt
and pants terribly faded
She stands at the balcony.
Recollecting those days
of drinking ‘karupatti’ coffee
in a huge brass tumbler
with the sheen of copper
she is drinking Tea
feeling drained
ruminating
that just like this Green Tea
life in the city too diluted.

POEM BY S.BRINDHA

பால்யமும் பச்சைத்தேநீரும்
-------------------------------------------------
சங்கரன்கோவில்
பாட்டி வீட்டுத்திண்ணையில்
அடர்ந்த வாடாமல்லி நிறத்திலான
சீட்டிப் பாவாடையுடுத்திக்கொண்டு
தட்டாங்கல் வீசி விளையாடிய
அந்தச் சிறுமியை
எனக்குள்ளே தேடுகிறேன்
காலம் சுழன்று
பெருநகரமொன்றில் அவளை
உட்கார்த்தி வைத்திருக்கிறது
அடுக்குமாடிக் குடியிருப்பின்
ஐந்தாவது தளத்து வீட்டில்
கையில்லா மேல்சட்டையும்
வெளுத்துக்கிடக்கும்
கால்சராயும் அணிந்தவண்ணம்
பலகணியில் நிற்கிறாள் அவள்.
செம்பொன் நிறங்கொண்டு மின்னும்
பெரிய பித்தளை லோட்டாவில்
கருப்பட்டிக் காப்பி குடித்த
நாட்களை நினைந்து கொண்டே
தேநீர் அருந்திக்கொண்டிருக்கிறாள்.
இந்தப் பச்சைத் தேநீரைப் போல்
நீர்த்துக் கிடக்கிறது
இந்தப் பெருநகர வாழ்க்கை
என்று சலித்தபடி..

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JULY - SEPTEMBER, 2024