INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, December 30, 2024

MARIMUTHU SIVAKUMAR

 A POEM BY

MARIMUTHU SIVAKUMAR


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

THE CANVAS OF SWEAT

Sea on four sides of the wall
For the wall accustomed to the lone single hue of Times
Now a different colour has decorated it.
on the wall straightened
each and every picture drawn
by sweat-soaked fingers
turned beautiful.
The pain-filled song of the mountain too
moaned and groaned in the drawing
The lifelines of the mountains
in the painting of sweat
gains strength as I see it.
The torments are listed
For the people’s leader
The components of the drawing are
Noted down
He so engrossed in the drawing
was taken aback
Due to the lifelines that offer one
the power to be at the helm
The drawing incomplete
stands sweating.
The drawing that had devoured sweat
Sits on the leader’s parts.
The painting of sweat
Torments the leader day-in and day-out.
At least from now onwards will the leader
see the dawn meant for us
inside the painting….

வியர்வையின் ஓவியம்.
சுவரின் நாற்புறமும் கடல்
காலங்களின் ஒரே வர்ணக்கலவைக்கு
பழகிப்போன சுவருக்கு
இம்முறை மாற்று வர்ணம் அலங்கரித்திருந்தது.
நிமிர்ந்த சுவரில்
வியர்வை படிந்த விரல்கள் வரைந்த
ஒவ்வொன்றும் அழகுபெற்றது.
மலைகளின் வலி மிகுந்த பாடல் வரிகளும்
ஓவியத்தில் முனங்கின..
வியர்வையின் ஓவியத்திலிருந்த
மலைகளின் ரேகைகள் வலுக்கொள்வதாய் காண்கிறேன்...
வேதனைகள்
பட்டியலிடப்படுகின்றன.
மக்களின் தலைவனிடம்
ஓவியத்தின் கூறுகள் குறிக்கப்படுகின்றன.
பழைய ஓவியத்துள் மூழ்கியிருந்தவன் திடுக்கிடுகிறான்...
தலைமைக்கொள்ளும் அதிகாரம் தந்த ரேகைகளால்
முழுமை பெறாத ஓவியம்
வியர்த்து நின்றது.
வியர்வை தின்ற ஓவியம்
தலைவனின் பாகங்களில் அமர்ந்து கொள்கிறது.
வியர்வையின் ஓவியம்
தலைவனை நிதமும் வதைத்துக்கொண்டே இருந்தது.
இனியாவது தலைவன் நமக்கான விடியலை
ஓவியத்துள் காண்பானா..
_______

மாரிமுத்து சிவகுமார்.




All reactions:

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024