POEMS BY
S.SAKTHI
Stars' arrival during nights
At least now I should talk to someone
Under the cool shade of the moon
drawn by children
there recline
Words meant for my poem to be coined.
*
Come tomorrow
We can meet, say thee
How to wade through tonight
All by myself
What should be done for that?
For thirst
There is no water
You alone remain
Deep down in my heart
As Amrit.
*
What at all I can pen
about Rain
Can there be anything superior
than having a child’s nature
*
We want not water
We want not thee dear
Want not land
Want not our native place
Want not power
Want not share in governance
We who know not how to live
Want nothing at all
Except crematorium for the departed souls.
As living corpses we are – Alas.
*
I see the rain
My heart, soaking in the boon.
*
In the Government’s Historical photo-exhibition
spanning many years
River Thenpennai is seen
shedding tears
*
At each and every threshold
‘Arali’ plant and’ Rose plant’ have begun to sprout.
Where is my Neem Tree and Moringa Tree?
Grandma’s tales
make me recall those Sundays
always
wherein
before having meals
we were given
sugar-filled rice-balls so divine.
*
One for father
One for elder sister
One for elder brother
One for younger brother
One for me
One for the puppy too
Thus tonight’s hunger
is raken care of by these riceballs.
What do we have in store
For tomorrow’s hunger
In Time’s legs that speed past
Hunger’s Life is held fast.
பகலில் மழை
இரவுகளில் நட்சத்திரங்களின் வருகை இப்பொழுதேனும்
யாருடனாவது
நான் பேசவேண்டும்
குழந்தைகள் வரைந்த
நிலவின் நிழலில் இளைப்பாறிக்கொண்டிருக்கிறது
என் கவிதைக்கான சொற்கள் ,
*
நாளைக்கு வா
சந்திக்கலாம் என்கிறாய்
இன்றைய இரவை
என்ன செய்து நானே கடப்பது
தாகத்துக்கு தண்ணீர் இல்லை
நீ தான் இருக்கிறாய்
என் நெஞ்சு
குழிக்குள் அமிர்தமாய் ,
*
மழை குறித்து
அப்படி என்னத்த எழுதி
கிழித்திட போகிறேன்
மனம் குழந்தையாக
இருப்பதை விடவா ,
*
நீர் வேண்டாம்
நீ வேண்டாம்
நிலம் வேண்டாம்
ஊர் வேண்டாம்
அதிகாரம் வேண்டாம்
ஆட்சியில் பங்கும் வேண்டாம்
வாழ தெரியாத எங்களுக்கு
எதுவும் வேண்டாம்
செத்தால் எரிக்க சுடுகாடு வேண்டும்
நடமாடும்
பிணங்களாய் நாங்கள் ,
*
மழை பார்க்கிறேன்
நனைந்து கொண்டிருக்கிறது இதயம்
*
அரசின் வரலாற்று
புகைப்பட கண்காட்சியில்
அழுதபடி காட்சியளிக்கிறது
தென்பெண்ணை ஆறு ,
*
வாசலுக்கு வாசல்
முளைக்க தொடங்கிவிட்டன
அரளி செடியும் ரோஜா செடியும்
எங்கே என்
வேப்பிலை மரமும்
முருங்கை மரமும்
ஞாயிறு தினங்களில்
உணவுக்கு முன்
உருண்டை பிடித்து சக்கரை தினித்து
தின்னக்கொடுத்ததை
நினைவுட்டுகிறது
ஆயா சொல்லும் கதைகள் ,
*
அப்பாவுக்கு ஒரு உருண்டை
அக்காவுக்கு ஒரு உருண்டை
அண்ணனுக்கு ஒரு உருண்டை
தம்பிக்கு ஒரு உருண்டை
எனக்கு ஒரு உருண்டை
நாய்க்குட்டிக்கும் ஒரு உருண்டை
உருண்டைகளால் நிரம்புகிறது
இன்றைய இரவுக்கான பசி
நாளைய இரவுக்கு
என்ன செய்ய போகிறோம்
உருண்டோடுகிறது
காலத்தின் கால்களில்
பசியின் உயிர் ,
*
ச. சக்தி
அழகு பெருமாள் குப்பம்
பண்ருட்டி,
No comments:
Post a Comment