A POEM BY
SUGANYA GNANASOORY
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
viewing the horizon
at sunset
a giant wave is fuming and boiling.
In the swirling memories washed ashore
just as shells
She so choked
rose and began to walk.
In the heat of abject infirmity
The sand
is surrendering itself into the waves
As the sun committing suicide
inside the sea
The water land sky - All of
She who fell in bloodshed
are being engulfed by the dark
As the Early Night of Late Evening.
அந்தியில்
அடிவான் பார்த்துக் கொண்டிருப்பவளின்
நெஞ்சுக்குள்
பேரலை குமுறிக் கொண்டிருக்கிறது
கிளிஞ்சல்கள்
கரையொதுங்குவது போல
நினைவுகளின்
கரையொதுக்கத்தில் திக்குமுக்காடிப் போனவள்
எழுந்து நடக்கத் துவங்கினாள்
ஆற்றாமையின் வெம்மையில்
மணல்
அலைகளுக்குள் தன்னை
ஒப்புக்கொடுத்துக் கொண்டிருக்கிறது
கடலுக்குள்
தற்கொலைத்துக் கொண்ட பரிதியாய்
குருதி சிந்த வீழ்ந்தவளின்
நீர் நிலம் ஆகாயமெல்லாம் இப்போது
இருள் கவ்விக் கொண்டிருக்கிறது
பின்மாலையின் முன்னிரவாய்.
- சுகன்யா ஞானசூரி
No comments:
Post a Comment