THREE POEMS BY
MADUSAN SIVAN
(1)
You would have come across a few in my semblance
and you would have mistaken those to be me
Here the truth is
Knowing the truth what at all you would do
Eons after eons I am creating humans
Eons after eons.
A bird threw at me a question
What was it I need not tell anyone
The bird knows it and so do I
That’s all there to it.
Stretching the legs I will be sitting elegantly
Still I couldn’t steer I, my soul to travel along my way
Just a lone event would spin many centuries
Centuries too many
Whenever you meet me dont see me as myself please
I can put it this way – I can be other than I you see
Once there sprang a marketplace
To auction my brain
That is, they thought that if they know my brain
they would be able to know who I am
At those times there was a crowd to celebrate me
Was it massive
More than that
Much more than even that
You please decide
I have never been myself
This I can say for sure
In those days the scent of God was emanating out of me
People would say and feel proud.
Why not? So it does –
even now indeed. Yes.
Though there won’t be the need
for you to realize that I am God
Only when I utter the word
The holy man i had known had always been
Me alone
And I have come to you now
If you can celebrate me removing my masks
I would give them to thee
Not ‘Please’ but if possible submit your prayers
I have a beloved No need to give her name without fail
I have a beloved – that is all.
நீங்கள் சிலபேரை பார்த்திருப்பீர்கள் என் சாயலில் அது நான் என்றும் சந்தேகப்படிருப்பீர்கள்
இங்கே உண்மை என்னவென்றால்
அந்த உண்மையை தெரிந்து என்ன செய்து விட போகிறீர்கள்
காலகாலமாக மனிதர்களை நான் படைத்தது கொண்டிருக்கிறேன்
காலகாலமாக
ஒரு பறவை என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டது
அந்த கேள்வி என்ன என்பதை உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் என்னிடமில்லை
அந்த பறவைக்கும் தெரியும் எனக்கும் தெரியும் அது போதுமானது
கால்களை நீட்டி லாவகமாக நான் உட்கார்ந்திருப்பேன்
ஆனபோதும் நான் என்கின்ற என் ஆத்மாவை என் வழியில் லாவகமாக பயணிக்க வைத்துவிட முடிந்ததில்லை
ஒரே ஒரு சம்பவம் பலநூறு காலங்களை நிகழ்த்தும்
பலநூறு காலங்களை
நீங்கள் என்னை சந்திக்கும் போதெல்லாம் தயவு கூர்ந்து என்னை நானாக பார்க்காதீர்கள்
இதை நான் இப்படியும் சொல்லிவிட முடியும் நான் என்பது நான் இல்லாமலும் இருக்கக்கூடும்
முன்பொருநாள் என் மூளையை ஏலமிட
ஒரு சந்தை கூடியது
அதாவது அவர்கள் நினைத்து கொண்டார்கள் என் மூளையை அறிந்து கொண்டால் என்னை அறிந்து விட முடிந்துவிடும் என்பதாக
அப்பொழுதெல்லாம் என்னை கொண்டாடுவதற்கென்று ஒரு கூட்டமிருந்தது
அது மிகப்பெரியதா
அதைவிட மிகப்பெரியதா
அதைவிடவும் பெரியதா
என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்
நான் எப்பொழுதும் நானாகவே இருந்ததில்லை
இதை மட்டுமே நான் என்கின்ற என்னால் உறுதி படக் கூறிவிட முடியும்
அப்பொழுதெல்லாம் என்னில் கடவுளுடைய வாடை வீசுவதாக சொல்லி மக்கள் பெருமைப்பட்டு கொள்வார்கள்
ஏன் இல்லை; இப்பொழுதும் கூடவே
நான் கடவுள் என்பதை நான் உரைத்தே நீங்கள் அறிந்திட வேண்டும் என்கின்ற அவசியம் இருந்திடாது என்கின்ற போதிலும்
நான் அறிந்து கொண்ட பரிசுத்தவான் நானாகவே இருக்கிறேன்
நான் இப்பொழுது உங்களிடம் வந்திருக்கிறேன்
முடிந்தால் கொண்டாடுங்கள் என்னுடைய முகமூடிகளை களைந்து உங்களிடமே கொடுத்து விடுகிறேன்
தயவு கூர்ந்து என்றில்லை முடிந்தால் உங்கள் பிரார்த்தனைகளை முன் வையுங்கள்
என்னிடம் ஒரு காதலி இருக்கிறாள் கட்டாயமாக அவள் பெயர் சொல்லிவிட வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை
என்னிடம் ஒரு காதலி இருக்கின்றாள் அவ்வளவு தான்.
As stones and mounts I would finish painting them.
After completion
I would leave them aside
For a while.
And make another canvas stand erect.
In the mean time
Love would have blossomed between them
Kisses would have been exchanged.
They would have gone to bed.
Some would have crossed their childhood.
Little girls would have attained puberty.
Some would have travelled to
New place
New Time
And new street
Some ageing some ceasing to be
Some trees drying up
Some seeds sprouting
So on a day when I chanced to see the painting drawn
On a different time it was making itself happen; go on.
என் ஒவியங்களில் இருப்பவர்களை
சந்தித்ததேயில்லை
வரைந்துகொண்டிருக்கும் பொழுதுகளிலும் பேசமுயற்சித்திருந்ததும் இல்லை
கற்களைபோலவும் மலைகளைப்போலவும் வரைந்து முடித்து விடுவேன்
முடித்ததும் சிலகாலம் அப்படியே கிடப்பில் இருக்க விட்டு
வேறொரு புதிய கான்வஸை நிமிர்த்தி வைப்பேன்
அதற்கிடையில் அவர்களுக்குள் காதல் வந்திருக்கும்
முத்தங்கள் பரிமாற்றப்பட்டிருக்கும்
கலவி முடிந்திருக்கும்
சிலர் பால்ய காலத்தை கடந்திருப்பர்
சிறுமியர் பருவமடைந்திருப்பர்
சிலர் புதிய ஊருக்கு புதிய காலத்திற்கு
புதிய தெருவிற்கென பயணப்பட்டிருப்பர்
சில மூப்பும் சில சாவும்
சில மரங்கள் காய்ந்தும்
சில விதைகள் முளைத்ததும் என
வரைந்த ஓவியத்தை மறுபடி பார்க்க கிடைத்த ஓரு நாளில்
அது வேறொரு காலத்தில் தன்னை நிகழ்த்திக்கொண்டிருந்தது
-மதுஷன் சிவன்
(3)
No wings.
The body that swings it
would have wings sprouting and blooming
_ heeding to this imagination
Will I shroud the sky
With blossoms
through the great grand greed disavowed
will I churn the Amrit.
After a day long separation
Hauling hands full of stars
The Sky.
From there being far away
Lying hidden
In the open courtyard of my house
For touching it with my eyes devoutly
This snowy nation
Standing splintered melting mellowing
Em Paavaai……
பெண்டூல ஊஞ்சலில் அசையும் வரை சிறகில்லை,
அசைக்கும் தேகத்தில் சிறகுகள் பூத்துக்குலுங்கும்
என்பதான கற்பனையின் நிமித்தம் வானடைத்த
பவித்திர மலர் கொண்டு
நிராகரிக்கப்பட்ட பேராசையின் வழி அமிர்தம் கடைவேன்
ஒரு பகல் நீளப் பிரிவின் பின்
கைநிறைந்த நட்சத்திரங்களை அள்ளிச்சுமந்தபடி வானம்,
அங்கிருந்து தூரத்தில் ஒளிந்திருக்கும்
என் வீட்டு முற்றத்தி்ல்
கண்களில் ஒற்றிக்கொள்ள இப் பனிபடர்ந்த தேசம்
உடைந்து உருகி கனிந்து நிற்கிறது
எம்பாவாய்;
-மதுஷன் சிவன்
No comments:
Post a Comment