INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, December 30, 2024

VATHILAPRABHA

 A POEM BY

VATHILAPRABHA


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
“Should spread my hands
Swing them like the wings
And fly as a bird”
_ He murmured.
It would have been nice if he had a wing!
10 x 10 room
Dim light
Thoughts soar off the nest
Bat won’t come in the category of birds
For the night that the owl knows
_ Owl’s eyes…..
Does he know the relation between night and bird…
He who can’t stand trying to fly
His thoughts take off like a sparrow.
For the bird touching the sky
is the nest that tiny
Queries flutter
No matter how so high
a bird flies
It is the nest
That is bird’s asylum.
He loosened his hands widespread
Vigorously knocking on the door
through the window he did throw.
A handful of rice and some curry
scattering
“Hen too a bird”
He mumbled.

கைகளை விரித்து
றெக்கை போன்று அசைத்து,
'ஒரு பறவையாகப் பறக்கணும்'
முணுமுணுத்தான்.
அவனுக்கு
றெக்கை ஒன்று இருந்திருக்கலாம்!
பத்துக்குப் பத்து அறை
மங்கலான வெளிச்சம்.
சிந்தனை கூடு விட்டுப் பறக்கிறது
வவ்வால் பறவையில் வராது
ஆந்தை அறியும் இரவுக்கு
ஆந்தையின் கண்கள்...
இரவுக்கும் பறவைக்குமான உறவு
அறிவானா?
நிற்க முடியாதவன் பறக்க எத்தனிக்க,
சிந்தனை சிட்டாய்ப் பறக்கிறது.
வானம் தொடும் பறவைக்கு
பறவைக் கூடு அத்தனை சின்னதா...?
கேள்விகள் படபடக்கின்றன.
எத்தனை உயரம் பறந்தாலும்
பறவைக்குத் தஞ்சம் கூடுதான்.
விரித்த கைகளைத் தளர்த்தினான்
கதவைப் பலமாகத் தட்டியவன்
கம்பிகளின் வழியே விட்டெறிந்தான்.
கவளம் சோறும்
கொஞ்சம் கறியுமெனச் சிதற
'கோழியும் பறவைதான்'
முணுமுணுத்தான்.

வதிலைபிரபா

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024