INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, December 31, 2024

BHARATHI AR

A POEM BY

BHARATHI AR


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

THE FIVE STAGES OF SUN
The morning sun like an eclipse
swallowing the moon
the sun reddened.
Darkness shrouded on
the other side of the moon.
The midday sun was swallowing the shadow
like a Python
body and life remained alone.
Sun at dusk similar to some affection
Right till the distance it has gone away
There spreads my shadow all the way.
The midnight sun is but darkness
Sultriness held fast to aloneness
sans shadows.
The sun at dawn is like a serpentine
It slowly gulps the dewdrops
The saltiness of tears tastes sweet.
Love too is like sun
Heat and flame permeate ; burn
For a whole day I bear the sun and go on
Life without getting burnt in the sun _
Can it be a meaningful one?


வெயிலின் ஐந்து நிலைகள்

காலை வெயில் ஒரு கிரகணம் போல
மதியை விழுங்கி சூரியன் சிவந்தது
நிலவின் மறுபுறம் கருமை சூழ்ந்தது
உச்சி வெயில் ஒரு மலைப்பாம்பு போல
நிழலை விழுங்கிக் கொண்டிருந்தது
தனித்திருந்தன உடலும் சீவனும்
அந்தி வெயில் ஒரு நேசம் போல
விலகிச் சென்ற தூரம் வரை
விரவிக்கிடந்தது என் நிழல்
நடுயாமத்தின் வெயில் ஒரு இருள் போல
நிழல்களற்ற தனிமையை
பற்றிக் கொண்டது வெக்கை
விடியலின் வெயில் ஒரு சர்ப்பம் போல
பனித்துளிகளை மெல்ல குடித்துவிடுகின்றது
கண்ணீரின் உவர்ப்பு இனிக்கின்றது
நேசம் என்பதும்
ஒரு வெய்யில் போல தான்
எப்போதும் கனல் இருந்து கொண்டேயிருக்கின்றது
ஒரு நாள் முழுக்க வெய்யிலை சுமந்தலைகிறேன்
வெய்யிலில் வாடாத வாழ்க்கை
என்னவாக இருந்து விடப்போகின்றது

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024