INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, December 30, 2024

YAVANIKA SRIRAM

 A POEM BY 

YAVANIKA SRIRAM



Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

SCENES SEEN IN CLOSE ENVIRONS



Snake sleeping with its head placed
on the mouth of rat-holes
Lizard in birds’ nests cupping and swallowing
its chicks
Descending from up above so focused
the Kingfisher catching the fishes
that come to the surface of water
opening their mouths to breathe
All can view these all
Sexual escapades
So near so close
When the same fishes spit the water
splashing it so high and making the insects
creeping along the plant-stems
stagger and stumble
and so swallow them
Other so scenes spectacular so close at hand
we look on as if saying
our secrets
not required for others
With sharp-edged weapons they cut and slice
umpteen number of times
Someone and leave
So near
Perennial rivers running so near
Plantain and paddy crops found to be fit for food
Vegetables some domestic animals for meat
So a place nearby
Agricultural lands turning then into commercial lands
In truth it is about adventurous sexual intimacies
we have but lots to tell
Whichever language all its letters of alphabets
as the grammatical change in the mode of singing
that occurs when two words converging
each one talking to other being near
whatever that be whichever
we see here
being so near.

அருகாமைக் காட்சிகள்
எலி வளைகளின் துவாரத்தில் தலைவைத்து உறங்கும் நாகம்
பறவைக் கூடுகளில் அதன் குஞ்சுகளைச் சுருட்டி விழுங்கும்
பல்லி
வானில் இருந்து குறிவைத்து இறங்கி
நீர்ப்பரப்பின் மேல் வாய் அலரும் கயல்களைக் கவ்வும் மீன் கொத்தி
எல்லோரும் பார்க்கலாம்
சாகசமான பாலுறவுகள்
இவ்வளவு அருகாமையில்
அதே மீன்கள் நீரைத் தம் வாயால் உயரே பீச்சி அடித்து தாவரத் தண்டில் ஊறும் பூச்சிகளைத் தடுமாறி விழவைத்து உண்ணும் போது
வேறு சிறப்பான காட்சிகள் இவ்வளவு அருகாமையில் நமது ரகசியங்கள் இன்னொருவருக்கு தேவையில்லை என்பது மாதிரி
நாம் பார்க்கிறோம்
கூர்மையான ஆயுதங்களால் அவர்கள் பலமுறை குத்தியும் வெட்டியும் ஒருவரைச் சாலையில் கிடத்தி விட்டுப் போகிறார்கள்.
இவ்வளவு அருகாமையில்
வற்றாத நதிகள் ஓடும் அருகே தான்
வாழை மற்றும் நெற்பயிர்கள் உண்ணத்தகுந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்ட காய்கறிகள் சில இறைச்சிக்கான வளர்ப்பு விலங்குகள் அப்படியான அருகாமை இடத்தை
விளை நிலங்கள் பிறகு விலை நிலங்கள் என்பதாக
உண்மையில் சாகசமான பாலுறவுகள் பற்றித் தான்
அனேகம் சொல்ல இருக்கிறது.
எந்த மொழியாயினும் அதன் லிபிகள் அனைத்தும் செப்பலோசையின் புணர்ச்சி விதிகளாய் அருகாமையில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும்படி அது எதுவோ ஆயினும்
நாம் பார்க்கிறோம்
மிக அருகாமையில் .

யவனிகா ஸ்ரீராம்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024