A POEM BY
FATHIMA NALEERA
Rendered in english by latha ramakrishnan(* First Draft)
The clouds appear as the wings
Of angel
As flying horses
As bird of surreal painting
As bizarre animals of the ancient days
As the march of waves radiant
As the giant torso of the mountain peaks
You don’t feel surprised about this – right?
Between human mind and the cloud
No great difference - behold
Clouds are dispersed with their directions changed
By wind
Hun=man hearts segregate into roots myriad
By thoughts
Some dream of throwing stones
and injure the cloud
Some hasten to wound the hearts
day-in and day-out – Alas.
But,
I have some knots
for my own self
And all their indifference
I will collect and throw off as
trash.
If they come as sand-castles
I will gain the boon
of being the rain-cloud - Yes.
Some coming as wind
try to rub against me
and ignite.
But I know very well
That these lot are but
Wind sterile.
Yet I…..
Will fly with all my thoughts radiant
and join the clouds
as Bird Unique.
மலட்டுக் காற்று
——————
-பாத்திமா நளீரா-
சிலநேரம் ....
மேகங்கள் தேவதையின் சிறகுகளை போலவும் ...
பறக்கும் குதிரையைப் போலவும் ...
சில விநோதமான ஓவியப் பறவை போலவும் ...
பண்டைய காலத்து விசித்திர
மிருகங்களைப் போலவும் ...
மினு மினுப்பான கடல் அலைகளின்
அணிவகுப்பு போலவும்...
மலை முகடுகளின் பெருத்த உடம்பை போலவும் ....
காட்சியளிக்கும்
இதில் உங்களுக்கு வியப்பேதும் இல்லைதானே...
மனித மனதிற்கும் மேகத்திற்கும்
பெரிய வித்தியாசம் இல்லை
காற்றால் திசைமாறி பிரிக்கப்படுகிறது மேகம்
மனித மனங்கள்
எண்ணங்களால்
பல வேர்களாக பிரிக்கப்படுகின்றன...
சிலர் கற்களை எறிந்து மேகத்தை காயப்படுத்த
கனவு காண்கிறார்கள்
சிலர் சொற்களால்
மனங்களை காயம்படுத்த
விரைகிறார்கள்....
ஆனால்
எனக்கு நானே சில
முடிச்சுகளை வைத்துள்ளேன்
இவர்களின் உதாசீனங்களையெல்லாம் குப்பையைப் போல்
அள்ளி வீசிவிடுவேன்..
இவர்கள் மணல் வீடுகளாக
வந்தால் ...
நான் மழைபொழியும் மேகமாக
வரமெடுப்பேன் ...
No comments:
Post a Comment