INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, December 30, 2024

THAMARAI BHARATHI

 A POEM BY

THAMARAI BHARATHI


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE GIFT OF PARTING
It was on an early summer noon
When Theekondrai would bloom
Just as a small branch
Our relationship cracked and broke
At that time a Koel called which we didn’t hear at all
Those given and received s gifts invaluable
Are to be exchanged by post
As mementoes of a union bygone
It was decided thereon
All that you had
And all that I had
We received
taking turns
The one which could never be over
none of us could return or regain.
Henceforth
should set right the shattered heart
so as to hear during every early summer
the call of the Koel.

பிரிவின் பரிசு
*****************
தீக்கொன்றை பூக்கும்
இளவேனில் காலத்தின்
நண்பகலொன்றில்தான்
சிறு கிளை போல
முறிந்தது உறவு
அப்போதொரு குயில்
கூவியதைக் கேட்கவேயில்லை நாம்
பரிசுகளாகக் கொடுத்தவற்றை
பரிசுகளாகப் பெற்றவற்றை
இவ்வுறவு முறிவின்
நினைவு பரிசாக
இருக்க
அஞ்சலில் பரிமாறிக் கொள்ளலாமென
முடிவாயிற்று
என்னிடமிருந்தது
உன்னிடமிருந்தது
என எல்லாம்
மாறி மாறி
பெற்றுக் கொண்டோம்
எப்போதும் தீர்ந்துவிடாத
அந்த ஒன்றை மட்டும்
திரும்ப தரவோ
திரும்ப பெறவோ
முடியவேயில்லை
இருவருக்கும்
இனி
நைந்த மனதைத்
தயார் செய்ய வேண்டும்
ஒவ்வொரு இளவேனில் காலத்தின் போதும்
குயிலின்
கூவலைக் கேட்க.

தாமரை பாரதி

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024