Middle of the jungle
_ Highways
Elephants would come across
In search of water.
With tiny little eyes
The elephant would keep under leash
and guard
the mammoth forest.
Where are the forests
While we ask thus
another query comes alive:
Where are the elephants?
In the forests crushed under the
trails of the cities
In the same old track
begging hapless
There wander miserably
Tuskers that have forests
in their mind.
Lighting the torch
they chased away
the elephant that had got into their village
Just as lighting
to deflect darkness.
The elephants hid inside the dark
swaying behind the gloom
that cannot be driven away.
The elephant begging at the temple entrance _
Wonder whose grandson it is .
In all the gods
the foremost one
remains the elephant.
Bearing testimony to the fact
That only after the age of Dinosaur
Gods came to sprout in tact.
Urbanization is
turning the elephants famished
So that we can survive.
I drew the elephant in the palm
From that day onwards
the child carries the jungle
with the hope and belief
that elephant is strolling in its hand.
Even the temple elephants
are not safe these days
They self-immolating and ceasing to be
Oh let not such time continue to be
Once in a blue moon
I come across elephant
When each elephant goes past
An era comes to a close.
In a hand-sized container
Miniscule sculptures
Made of ivory
When I see another elephant again
Then I would get drenched in rain.
குகை மா புகழேந்தி
மழை மேகங்கள்
வானில் நடக்கும்
யானைக் கூட்டங்கள்
காட்டின் நடுவே
நெடுஞ்சாலைகள்
குறுக்கிடும் யானைகள்
தண்ணீர் தேடி
சின்னஞ்சிறு கண்களால்
மாபெரும் காட்டை
கட்டிக் காக்கும் யானை
எங்கே காடுகள்
என்கிற போதே
உயிருடன் உடன்வரும் கேள்வி
எங்கே யானைகள்?
நகரங்களின் கால்தடத்தில்
நசுங்கிய காடுகளின்
அதே பழைய வழித்தடத்தில்
பிச்சையெடுத்தபடி
பரிதாபமாய் அலைகின்றன
நினைவில் காடுள்ள யானைகள்
ஊருக்குள் புகுந்த யானையை
தீப்பந்தம் கொளுத்தி
விரட்டினார்கள்
இருளை விரட்ட
ஒளி ஏற்றுவதைப் போல
யானைகள் இருளுக்குள் ஒளிந்துகொண்டன
விரட்ட முடியாத
இருளின் பின்
அசைந்தபடி
கோவில் வாசலில்
கையேந்தும் யானை
எந்த செல்வந்தனின் பெயரனோ?
கடவுள்களில்
முதற் கடவுள்
யானையாகவே இருக்கிறது
டைனோசர் காலத்திற்கும் பின்புதான்
கடவுள்கள் முளைத்தன
என்பதற்கு சாட்சியாய்
நகரமயமாக்கல் என்பது
நாம் வாழ
யானைகளைப் பட்டினிப் போடுவது
உள்ளங்கையில்
யானையை வரைந்தேன்
அன்றிலிருந்து காட்டைச் சுமக்கிறது
குழந்தை
தன் கையில்
யானை உலவும் நம்பிக்கயோடு
கோவில் யானைகளுக்கும்
பாதுகாப்பில்லை இப்போது
தீக்குளித்து யானைகள்
இறக்கும் காலம்
இனியும் தொடராதிருந்தால் நல்லது
எப்போதாவதுதான்
யானையைப் பார்க்கிறேன்
ஒவ்வொரு யானை கடக்கும்போதும்
ஒரு யுகம் முடிகிறது
கையளவு கண்ணாடிக் குடுவைக்குள்
யானைத் தந்தத்தில்
செய்து வைத்த சிற்பங்கள்
மீண்டுமொரு யானையை
எப்போது காண்பேனோ
அப்போது நனைவேன் மழையில்.
No comments:
Post a Comment