INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, December 30, 2024

PANDIAN KAZHAARAM DULA LINGAN

 A POEM BY

PANDIAN KAZHAARAM DULA LINGAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

The old lady who always brush her teeth
with the aerial root of the Banyan tree
buries her last tooth
in cow dung
concealing it from the Sky
Just as she did her first ever tooth
when she was a little girl
It was a place
where stay children who upon
hearing the false tale
of a tooth sprouting in a grandma’s mouth
laugh revealing their toothless state.
He who sells balloons there
reminds one of the umbilical cord pregnant mother
The poet who used the metaphor of
balloon bursting moment
for miscarriage
With tears rolling
changed the poem
as nothing of that sort taking place.
The poem having normal delivery
gave birth to a small poem.

ஆலமர விழுதில்
பல் துலக்கிப் பழகிய கிழவி
தனது கடைசிப் பல்லினை
அவள் சிறுமியாய்
இருந்தபொழுது விழுந்த
முதல் பல்லைப் போல
ஆகயத்திற்குக் காட்டாது
சாணத்தில் புதைத்து மறைக்கிறாள்
பாட்டிக்குப் பல் முளைத்த
பொய்க் கதை கேட்டு
பொக்கை வாய் தெரிய சிரிக்கும்
சிறுவர்கள் வசிக்கும் ஊர் அது
அங்கு பலூன் விற்பவன்
தொப்புள் கொடிக் கர்ப்பிணித் தாயை
நினைவூட்டிச் செல்கிறான்
பலூன் உடையும் பொழுதை
கர்ப்பம் கலைவதாய்
உருவகப் படுத்திய கவிஞன்
கண்ணீர் சொட்ட
அப்படி ஒன்று நிகழாததாய்
கவிதையை மாற்றிவிட்டான்
கவிதை சுகப் பிரசவத்தில்
குட்டிக் கவிதை ஒன்றை ஈன்றது

- பாண்டியன் கழாரம் துலாலிங்கன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024