Lust is counter-politics.
When you were discussing about this
With me in the sixth segment of Arugan Medu Novel
I was in sailboat as vagrant
heading towards port-towns.
As living inside your fiction
I too have to abide by a
That the
Turning me into words
and remaining entangled in its grammatical order
Seeing me struggling to come off it
You laugh.
Henceforth don’t you write about me
My giant form won’t fit into your story frame
Symbolizing urinating into
a small cascade flowing out of a rock-crevice
Is sheer absurdity, to say the least.
Don’t you symbolize my body of five-sense
into your ‘Ainthinai’ Nation.
Language-based land
is not meant for me. Understand.
I am a vagrant wandering along the sea
beyond language, you see.
Yes, Love is a Political Statement.
Lust, Counter-Politics.
You stand at the eastern edge of this
sub-continent.
My sailboat at a spot where it had paused
at the West-coast town
swaying in the wave.
The Political Statement of Lust
Slipping from hand and lying in the midst of
directions opposite
In the salty air
the pages of the volume
toss and roll on
and on.......
○ காமத்துப்பா லரசிய லறிக்கை
காதல் ஓர் அரசியல் செயல்பாடு
காமம் ஓர் எதிர் அரசியல்
இதைப் பற்றி அருகன்மேடு புதினத்தின்
ஆறாம் பகுதியில் நீ
என்னுடன் பேசிக்கொண்டிருந்தபோது
நான் நாடோடியாகத்
துறைமுகப் பட்டினங்களை நோக்கி
பாய்மரக் கப்பலில் பயணித்துக்கொண்டிருந்தேன்
உனது புனைவுக்குள் வாழ்ந்துகொண்டிருப்பதால்
நிலைக்குடி பேணும் இடக்கரடக்கலை
நானும் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது
என்னைச் சொற்களாக்கி
மொழியின் இலக்கண ஒழுங்கமைவுக்குள் சிக்கவைத்து
அதிலிருந்து வெளியேறத் திணறுவதைக் கண்டு நகைக்கிறாய்
இனி என்னைப் பற்றி எழுதாதே
எனது பேருருவம் உனது கதைக்குள் அடங்காது
சிறுநீர் கழிப்பதைப் பாறைப் பிளவிலிருந்து
சிற்றருவி கொட்டுவதாக உவமிப்பது அபத்தம்
எனது ஐம்புலன் உடம்பை
உனது ஐந்திணைத் தேசமாக உருவகிக்காதே
மொழிவழி தேசியம் எனக்கானதில்லை
நான் கடல்வழி அலையும் மொழிக்கடந்த நாடோடி
ஆம், காதல் ஓர் அரசியல் செயல்பாடு
காமம் ஓர் எதிர் அரசியல்
இந்தத் துணைக்கண்டத்தின் கிழக்கு விளிம்பில் நிற்கிறாய்
எனது பாய்மரம் மேற்குக் கடலோரப் பட்டினத்தில்
தேங்கிய ஓரிடத்தில் அலையில் அசைகிறது
எதிரெதிர் திசைகளின் நடுவே
கைத்தவறி விழுந்துக்கிடக்கும்
காமத்துப்பா லரசிய லறிக்கை
உப்புக் காற்றில் ஏடு புரள்கிறது.
No comments:
Post a Comment