INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, December 31, 2024

S.VAIDHEESWARAN

 TWO POEMS BY 

S.VAIDHEESWARAN


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

1.THE STRUGGLE

The river would measure
Rain’s length.
In life imprisonment
vulnerable wind would rage inside the balloon.
The aged heart rising and falling being
erroneous beat of Time
Close to the third floor railings
Quite callous fight between
brain’s delirium
and life glued to the body like Iguana
In the midst of
experimental workshops
and freedom unleashed
with an umbrella form-torn
engaged in word-hunt
sweating and spent-out
the Neo Poet.

வைதீஸ்வரனின் கவிதை
போராட்டம்
ஆறு அளக்கும்
மழையின் நீளம்
ஆயுள் தண்டனையில்
பலூனுக்குள் குமுறும் அற்பக் காற்று.
எழுந்து விழும் வயோதிக இதயம்
காலக் குதிரையின் தப்புத்தாளம்
மூளைக் கொதிச்சலுக்கும்
உடம்பின் உடும்பு உயிர்க்கும்
மூன்றாம் மாடிக் கிராதியோரம்
மூர்க்கமான மௌன யுத்தம்
பரிசோதனைப் பட்டறைகளுக்கும்
தறிகெட்ட சுதந்திரத்துக்கும்
இடையில்,
வடிவம் கிழிந்த குடையுடன்
வார்த்தை வேட்டையாடி வியர்க்கிறான்
நவீன கவிஞன்.

(2)

A SOUND WITHIN
Age is a ‘Lifometer’.
Changing us into ants inside Time
moving us slowly
nurturing and torturing
It drags us along
into all too dark a jungle
utterly directionless.
It depicts years as life.
Stirring and severing different images
making us believe to be ‘I’
pushing us headlong into
the valleys of middle age.
Rising up still, and realizing
within ourselves self-deception
when we falter
giving walking-stick it helps us
climb ashore.
Unable to move on
standing on the road
where we’re destined to cease
when we look back
Age seems not to have been
but is lost
as a dream without trace.
I have no mouth to laugh.

உள்ளே ஒரு ஓசை
வயது ஒரு உயிர்மானி.
காலத்துக்குள் நம்மை
எறும்புகளாக்கி மெல்ல நகர்த்தி
வளர்ப்பதும் வதைப்பதுமாக
திக்குத் தெரியாத சம்பவக் காட்டுக்குள்
இழுத்துச் செல்லுகிறது.
வருஷங்களை வாழ்வாகச் சித்தரிக்கிறது.
வெவ்வேறு பிம்பங்களை
எழுப்பி அழித்து ‘நான்’ என்று
நம்பவைத்து நடுவாழ்க்கை
பள்ளத்தாக்குகளில் விழுத்துகிறது.
மேலும் எழுந்து வந்து நமக்குள்
தன்னேய்ப்பை உணர்ந்து தடுமாறும் சமயம்
கைத்தடியைக் கொடுத்து கரையேற்றிவிடுகிறது.
நகரமுடியாமல் விதி முடிந்த வீதியில் நின்று
திரும்பிப்பார்க்கும்போது
வயது இருந்ததாகத் தெரியாமல்
சுவடற்ற கனவாய் தொலைந்துவிடுகிறது.
சிரிப்பதற்கு எனக்கு வாயில்லை.

S.VAIDHEESWARAN 

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024