INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, December 30, 2024

THENMOZHI DAS

 A POEM BY 

THENMOZHI DAS


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
FOR ANY DREAM RADIANCE IS EVERYTHING
Dreaming a poem
and seeing it in the dream
are different polar shadow
falling on soil beyond the eyes
When the sea is seen by the eyes
and appears in the dream
It has but different depths
Love that is air-conditioned inside
has blood-circulation healthier
than the love that knows warmth.
As the art of the light turning crystal
Running across parting in hair
from the crown of dawn
For you I yearn.
It is those words that can’t strangulate themselves
that are born again and again
and cry on and on
Wherever sorrow stumbles and staggers
Fireflies come and sit
Just as the midwife.
Even for disarray a wavy move of the tiny thread
could bringforth an orderliness indeed.
Equilibrium is but steadfastness so firm
In the middle scale of the past
left to remain alone
coupled with the water-drops of philosophies
there would be a wholesome liberation
Accusing one of crime and also offering crime
So wandering in the land
the cruel faces
if they were to be viewed with
the formulaic minuteness
the teeth of buds
being outside the lip-corners
unsmiling
cannot be seen as something surprising.
Quietude remains within the range of the eyes
in the flowers’ tongues
Heart is a forsaken island
It knows for certain _
For any nation Sun is no alien
For any and every dream
radiance is everything; Amen

எந்தக் கனவிற்கும் ஒளியே சகலமும்
ஒரு கவிதையை கனவு காண்பதும்
கனவில் காண்பதும்
வேறு வேறு துருவ நிழல்
கண்ணுக்கெட்டாத புலத்தில் வீழ்வது
கடல் கண்களில் தெரியும் போதும்
கனவில் தெரியும் போதும்
வேறு வேறு ஆழங்களைக் கொண்டிருக்கிறது
உள்ளுக்குள் குளிரூட்டப்பட்ட காதல்
கதகதப்பை அறிந்த காதலைவிட
ஆரோக்கியமான ரத்தவோட்டம் கொண்டது
தெளியும் ஒளி
புலரியின் உச்சி வகிடில் ஓடும் கலையாய்
உனை விரும்புகிறேன்
தன்னைத் தூக்கிலிட்டுக் கொள்ள விரும்பாத வார்த்தைகள் தான்
பிறந்து பிறந்து அழுகின்றன
துக்கம் தடுமாறும் இடங்களிலெல்லாம்
மின்மினிப் பூச்சிகள்
மருத்துவச்சியைப் போல் வந்தமருகின்றன
சீர்குலைவுக்கும் ஒரு மெல்லிய ஒழுங்கமைவை சிறுநூலின் நெளிவு
உண்டுபண்ணக் கூடும்
சமச்சீரானது எத்தகைய அசையாத உறுதி
தனித்திருக்க விட்ட
கடந்த காலத்தின் நடுமுள்ளில்
தத்துவங்களின் நீர்த்திவலையோடு
முழுமையான விடுதலை ஒன்று உண்டு
குற்றம்சாட்டி ,குற்றம் ஊட்டி அலையும்
கோர முகங்கள் தேசத்தில் உலவுவதைக்
வகைச்சூத்திர நுட்பத்தில் கண்டால்
மொட்டுகளின் பற்கள் அதன்
இதழ் நுனிகளுக்கு வெளியே
புன்னகை செய்யாமல் இருப்பதை
அதிசயமாய் காணமுடியாது
அமைதி கண்ணுக்கு எட்டும் தூரத்தில்
பூவின் நாவுகளில் உள்ளது
ஒதுக்கப்பட்ட தீவு மனம்
அது திடமாக அறிகிறது
எந்த தேசத்திற்கும் சூரியன் அந்நியமல்ல
எந்தக் கனவிற்கும் ஒளியே சகலமும்
Composed by Thenmozhi Das

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024