A POEM BY
IYARKKAI
He the I was standing with thee , Dear Sea
Be as much salty as you fancy
But please don’t single out and exhibit
his tears of mine offered at thy feet secretly.
Nor does he require all those he shared with thee
till the policeman came and
pushed him away
Don’t you send any short messages
in his trousers
Reading them again and again
nothing would be gained.
Suffice to have this much of acquaintance
with him this day
As usual keep my trails
Let none – no one – no-o-o-o one
knows it
You are my only solace
I will come another day as always
தோழி கடல்
**************
- இயற்கை
முதன் முதலாக
உன்னோடு நின்றிருக்கிறான் கடலே
எவ்வளவு வேண்டுமானாலும் கரித்துக்கொள்
உன்னோடு இரகசியமாய்
தந்துவிட்ட கண்ணீரை மட்டும்
ஒருபோதும் அடையாளப்படுத்திடாதே
காவலர் உந்தித் தள்ளும்
பின்னிரவு வரை
உன்னோடு பேசிக்கிடந்த சேதிகளும்
அவனுக்கு வேண்டாம்
அவனின்
கால்சட்டைக்குள் எனக்கெந்த
குறிப்புகளையும் வைத்தனுப்பாதே
அவற்றை மீண்டும் மீண்டும் படித்து
என்ன ஆகப் போகிறது.
அவனோடு
இன்று இந்த அறிமுகம் போதும்
வழக்கம்போல என் சுவடுகளை வைத்திரு
யாருக்கும்
யாஆஆருக்கும்
தெரியவேண்டாம்.
நீதானே கதி.
பிறகொருநாள் வருகிறேன்.
No comments:
Post a Comment