INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, November 5, 2022

PAALAI NILAVAN

 A POEM BY

PAALAI NILAVAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE THUNDER

To the church where K was the pastor

one day a person said to be a visionary
paid a visit
to give a sermon
As K was one reared with
being called the sinner
He kept on saying
‘I am a sinner
I am a sinner’
If you are a sinner
Disrobe yourself of the pulpit gown
and leave
Said the visionary
As K removed the garb
all the parishioners
exited with him
Calling
‘I am also a sinner’
the visionary
came running behind
Suddenly the gown
folding in his leg
staggering
as he tumbled down
all the others lifted him
and had him seated
At once hugging K like a baby
‘In truth I am no visionary
I have come here to offer one-tenth share
from the stolen ware’
said he weeping without reprieve.
What have you taken
Asked K
Inserting his hand into the pocket
Taking out thirty silver coins
And putting them on the earthen ground
Where he fell down
‘I stole this from Judas who has throttled himself
and is on the throes of death’
Said he
‘Then where is Christ?’ Enquired K.
The soldiers
are tying him in the tree
and crucifying him’, said the visionary.
Turning insane
K began
Running deliriously
and hundred persons
also turning mad
pursued him
At that instant
a thunder blasting in the sky
landing on a bird
Crazy K beheld

Paalainilavan Nilavan
இடி

கா
பாதிரியாக இருந்த
சர்ச்சுக்கு
ஒரு நாள்
தீர்க்கதரிசி என்று சொல்லப்பட்ட ஒருவர்
பிரசங்கம் செய்ய வந்தார்
கா
பாவி என்று சொல்லி
வளர்க்கப்பட்டவன்
என்பதால்
நான் பாவி
நான் பாவி என்று
சொல்லிக்கொண்டே இருந்தான்
நீ பாவி என்றால்
அங்கியை
கழற்றி வைத்து விட்டுப் போ
என்றார் தீர்க்கதரிசி
கா அங்கியை கழற்ற
சபையார் அனைவரும்
அவனோடு வெளியே
இறங்கிவிட்டனர்
தீர்க்கதரிசி
நானும் பாவிதான் என்றபடி
பின்னே
ஓடி வந்தார்
திடுமென அங்கி காலில் மடிய
நிலை தவறி
கீழே சாய்ந்து விழுந்தவரை
எல்லோரும் தூக்கி அமர வைத்ததும்
குழந்தை போல்
கா வைகட்டிக்கொண்டு
தீர்க்கதரிசி
நான் உண்மையில் தீர்க்கதரிசி இல்லை
திருடிய பொருளிலிருந்து
தசமபாகம்
செலுத்த வந்தேன் என்றபடி
தேம்பித்
தேம்பி அழுதார்
என்ன திருடினீர்கள் என்றான் கா
தன் ஜோபியில்
கைவிட்டு
முப்பது
வெள்ளிக்காசுகளையெடுத்து
தான் விழுந்த
மண் தரையிலிட்டு
இவை நாண்டு
இறந்து கொண்டிருக்கும்
யூதாசிடமிருந்து
நான் அபகரித்தது என்றான்
அப்போ கிறிஸ்து எங்கே என்றான்
கா
போர்ச் சேவகர்கள்
மரத்தில் பிணைத்து
ஆணியடித்துக்
கொண்டிருக்கிறார்கள் என்றான்
தீர்க்கதரிசி
கா
பைத்யனாகி
தலை தெறிக்க ஓடத் துவங்கினான்
அவனோடு
மனம் குலைந்த
நூறுபேர்
ஓடிக்கொண்டிருந்தனர்
அப்போது
வானில் பொட்டிய
இடி
ஒரு
பறவை மீது
விழுந்ததை
பைத்யம் பிடித்த கா பார்த்தான்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024