INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, November 5, 2022

MULUMATHY MURTHALA

 TWO POEMS BY

MULUMATHY MURTHALA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)
RAIN TWOFOLD
Just as you
I too
am running away
escaping Rain incessant
There appeared no shades nor shelters
within reach
Seeing what followed
If I tell you that it is the first ever rendezvous
between Rain and I
Surely none of you would believe
Between the clouds
A man and a woman
travel inside Rain
gathering close and moving apart
The rain that
after a long time
halting under a tree
taking rest
leaving some droplets behind
In required spots
got into the bus
and set out.
In that bus having 54 seats
side by side
the two raindrops were travelling.
Having sat in the deluxe seat
the journey proving pleasurable
The Rain didn’t want to step out.
Now within and without
two rains
Inside the bus the man-woman raindrops turning
into vapour
renew the pouring of
the droplets of lust.
The chances of sending the ongoing outer Rain
within
proved scarce.
As of now
the Rain doesn't stop
nor do I find a stop.

இரண்டு மழை
விடாது துரத்திக் கொண்டிருக்கும் மழைக்குத்தப்பி
உங்களைப்போல் நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன்
ஒதுங்க இடம் தேடிக் கொண்டிருக்கிறேன்
அண்மித்த தொலைவில்
நிறுத்தங்கள் எதுவும் தென்படவில்லை
பின்னர் நிகழும் சம்பவங்களைப் பார்த்து
இது மழைக்கும் எனக்குமிடையிலான
கன்னிப் பயணம் என்றால்
யாரும் நம்பமாட்டீர்கள்
உரசலும் விலகலுமாய் இரண்டு
மேகங்களுக்கிடையில்
ஒரு ஆணும் பெண்ணும்
மழையினுள்ளே பயணிக்கின்றனர்
நீண்ட நேரத்தின் பின்
மரத்தின் கீழ் ஒதுங்கி
ஓய்வெடுத்துக் கொண்ட மழை
சில துளிகளை தேவையான
இடங்களில் இறக்கிவிட்டு
பஸ்ஸில் ஏறிப் புறப்பட்டது
54 ஆசனங்களைக் கொண்ட
அந்தப் பேரூந்தில் அருகருகே
இரண்டு மழைத்துளிகளும்
பயணித்துக் கொண்டிருக்கின்றன
ஆடம்பர இருக்கையில் அமர்ந்த மழைக்கு
பஸ் பயணம் சொகுசாக இருந்ததால்
வெளியே செல்ல விரும்பவில்லை
இப்போது உள்ளேயும் வெளியேயும்
இரண்டு மழை
பஸ்ஸில் இரண்டு ஆண் பெண் மழைத்துளிகள் ஆவியாகி
மீண்டும் பொழியத் துவங்குகின்றன
வேட்கையின் துளிகளை
வெளியில் தொடரும் மழையை உள்ளே அனுப்பும் சாத்தியங்களும்
கைகூடவில்லை
இப்போதைக்கு
மழைக்கும் நிறுத்தமில்லை
எனக்கும் நிறுத்தமில்லை

முழுமதி எம்.முர்தளா


தாகிப்பும் தகிப்பும்
------------------
பிரிவின் தாகிப்பை
எந்த மொழிகொண்டு நிரப்பிடுவேன்
முப்பத்து ரெண்டு சொட்டுத் துளிக்குள் கசிகிறது இதயத்தின் தகிப்பு
எவருமற்ற வெளி
எதுவுமற்ற மௌனம்
எங்குமற்றது சொல்
எவரும் பேசாத சொல்லையெடுத்து விதைக்கிறேன்
அர்த்தம் விருட்ஷிக்கையில் நீழல் குளிருமொரு காலம்
எத்தனையாம் துளியில் துளிர்ப்பது
மீள நீழல்
(2)
THE WORLD OF LOVE SUPREME

What to do after a point
Both of us stopped flying and
breaking apart the sky
took one slice each.
Since that day one slice with you
and the other with me -
So lies scattered sky’s feather.
The stars in the slice I have
and the Moon in yours
Thus our world of wholesome love
is radiant
We remaining together
with the entire sky in our fold
is how we should fulfill our obligation
to those birds
which wishing from time memorial
to build their nest in the sky
keep pursuing us all the while
பேரன்பின் உலகம்
-------------------------------
என்ன செய்ய ஒரு கட்டத்திற்கு மேல்
இருவரும் பறப்பதை நிறுத்திவிட்டு
வானத்தை பிளந்து
ஆளுக்கொரு துண்டை எடுத்துக் கொண்டோம்
அன்றிலிருந்து உன்னிடம் ஒரு துண்டும்
என்னிடம் மறு துண்டுமென
உதிர்ந்து கிடக்கிறது வானத்தின் சிறகு
என்னிடமிருக்கும் துண்டில் நட்சத்திரங்களும்
உன்னுடைய துண்டில் நிலவுமென
பிரகாசித்துக் கொண்டிருக்கிறது
நம் பேரன்பின் உலகம்
முழுவானமும் நம் வசமிருக்க
இருவரும் இணைந்திருப்பதே
ஆதியிலிருந்து வானத்தில் கூடுகட்ட நினைத்து
நம் பின்னால் அலைந்து கொண்டிருக்கும் பறவைகளுக்கு
நாம் செய்யும் நன்றிக்கடன்

முழுமதி எம்.முர்தளா

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JULY - SEPTEMBER, 2024