A POEM BY
KANNAN VISWAGANDHI
faces myriad
would whizz past
As ship’s radar
Computer’s search
You see those faces surfacing
from memory
and match them
Face One
Face Two
Face Three
As a stinging slap
As a thunder falling
straight upon the head
the face perfectly matching up
with that of
junior paternal aunt
washed ashore
in Cape Comerin
the search freezes
in that moment.
முகம் பொருத்துதல்
வெளியூர்ப் பயணத்தில்
பல முகங்கள்
சட்டென கடக்கும்
முகமொன்று ஈர்க்கிறது
கப்பலின் ரேடார் போல
கணினியின் தேடல் போல
நினைவிலிருந்து மேலெழும்
முகங்களைப் பொருத்திப்
பார்க்கிறீர்கள்
முகம் ஒன்று
முகம் இரண்டு
முகம் மூன்று
பளாரென்று அறைந்தது போல
சட்டென இடியொன்றுத்
தலையில் இறங்கியது போல
முகம் பொருத்திப் போகிறது
கன்னியாகுமரியில்
கரையோரம் ஒதுங்கிய
சின்ன அத்தையின்
முகத்துடன்
தேடல் உறைகிறது
அக்கணத்தில்
கண்ணன் விஸ்வகாந்தி
No comments:
Post a Comment