A POEM BY
M.SATHYA
For Ponnamma
of the veggie shop
who keeps the coins received
underneath the sack
Trust in fellowmen must be
stronger than locked iron gates
***
Right In the middle of the road
A crow lying dead
Halting the vehicle
with whatever I could get
I pushed it to the roadside.
‘Once dead how could be resurrected
Let’s at least save it from being crushed
right in front of our eyes’
Feeling thus despaired
when moving ahead
seeing a squirrel running helter-skelter
applying the break
the heart felt gratified
being eased of
some sense of guilt.
***
Going into the cafeteria
where two hundred and odd can be seated
I ordered a fruit juice and was gulping it all alone
At that juncture another woman
Just like me had come in
and asking for a cup of tea
began drinking it.
In that serene atmosphere
She and I
having none beside to chat and share
Eyeing each other empathetically
were smiling and suspending the aloneness.
"பெரு மனிதர்கள்"
காய்கறிக் கடையில்
வாங்கும் சில்லறைகளை
சாக்கு பைக்கு அடியில்
போட்டு வைக்கும்
பொன்னம்மாவிற்கு
மனிதர்கள் மீதான
நம்பிக்கை என்பது
பூட்டிய இரும்புக்கதவுகளை விட வலிமையானதாகவே இருக்கக்கூடும்..
***
சாலை நடுவே காகம் ஒன்று
இறந்துக் கிடக்க வாகனம் நிறுத்தி
கையில் கிடைத்தப் பொருளால்
காகத்தை ஓரம் தள்ளினேன்
மரித்தபின் காப்பற்ற என்ன இருக்கிறது
கண்முன்னே நசுங்காமலாவது பார்த்துக்கலாம் என்ற விரக்தியில் சற்றே
முன்னே நகர குறுக்குமறுக்கில்
அணில் ஒன்று கடப்பதைப் பார்த்து
சட்டென வாகனம் நிறுத்தியதில்
ஏதோ ஒரு குற்றவுணர்வை
மனம் சமன் செய்துப் போனது....
*********
இருநூறு பேர் அமரக்கூடிய அளவிலான அந்த உணவகத்தில் தனியாக சென்று
ஒரே ஒரு பழரசத்தை கேட்டு வாங்கி குடித்துக் கொண்டிருந்தேன்
அந்நேரத்தில் என்னைப்போலவே இன்னொரு பெண்ணும்
தனியாகவே உள்வந்து
ஒரு தேநீரை கேட்டு வாங்கிப் பருக ஆரம்பித்திருந்தாள்
அமைதியான அச்சூழலில் பேச யாருமற்ற
நாங்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம்
ஒரே பரிதாபக் கண்ணோட்டத்தோடு பார்த்துக்கொண்டு
புன்னகைத்து தனிமையை கரைத்துக்கொண்டிருந்தோம்..
மதுரை சத்யா
No comments:
Post a Comment