A POEM BY
MALINI MALA
with the oil getting over
and
on the verge of extinction
The Autumnal Tree
that after getting ready for
bidding goodbye
wearing hues splendid
and waving
My Ultimate Word
that on my final breath
would be buried in smile
In all is treasured
the lone word unveiled
by the one and only language.
•
எண்ணெய் வற்றி
அணையப்போகும்
இறுதிக்கணத்தில்
ஒளி பெருக்கும் திரி,
விடைபெற
ஆயத்தமாகி விட்ட பின்
வர்ணமுடுத்தி கையசைக்கும்
உதிர்கால மரம் ,
சொல்லத் துடித்து
இறுதி மூச்சில்
புன்னகைக்குள் அமுங்கப் போகும்
என் கடைசி வார்த்தை,
எல்லாவற்றுக்குள்ளும்
வெளிப்படாத ஒற்றைச்சொல்லை
பொத்தி வைத்திருக்கிறது
ஒரே மொழி.
No comments:
Post a Comment