A POEM BY
VETRICHELVAN
Translated into English by Latha Ramakrishnan(*first Draft)
in sun and rain
in greenwoods and mountain slopes
would bring each evening
A Screwpine flower
And adorn mother’s head
with it
Upon Mother’s crest
It would remain
As a silvery crown
Father being fragrant Mother would know
Mother’s being so Father knows
In their midst the Screwpine flower
would be lying
with its scent lost.
மணம்
வெயிலிலும் மழையிலும்
காட்டிலும் மேட்டிலும்
கிடை ஆடுகளோடு
பொழுதுகளை கழிக்கும் அப்பா
ஒவ்வொரு மாலையிலும்
ஒரு தாழம்பூவை கொண்டு வந்து சூட்டி விடுவார்
அம்மாவின் தலையில்
பார்ப்பதற்கு ஒரு வெண் கிரீடம் போல்
அம்மாவின் தலையில் குடிகொண்டிருக்கும் தாழம்பூ
அப்பா மணப்பது அம்மாவுக்கு தெரியும்
அம்மா மணப்பது அப்பாவுக்குத் தெரியும்
இடையில் தாழம்பூவு வாசம் இழந்து கிடக்கும்
வெற்றிச் செல்வன்
No comments:
Post a Comment