INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, November 5, 2022

THENMOZHI ASHOK

 A POEM BY 

THENMOZHI ASHOK

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


MAKEOVER


Wearing elder sister’s
worn-out clothes
she would play the hopscotch game
Merely seeing the full-skirt and blouse in the bazaar
she turning ecstatic
changed however to full-skirt and half-sari and
went inside the secluded shack.
whirling in the merry-go—round called Time
and coming to stand on the ground
staggering
She felt bewildered to the core.
For the lone child born of her
Full-skirt and blouse not familiar.
Nor the hopscotch game
She has not seen bazaar;
nor the shack-like structure at all.
Her wardrobe overflows with attires
But as one standing at a distance
and enjoys the spray of rain
Suffice to have one jeans pant for a week
says she again and again!

இடைவெளிக் கோளாறு
அக்காவின் பழைய ஆடைகளையே உடுத்தி
சில்லு நொண்டி விளையாடுவாள்.
மஞ்சள் பூ போட்ட
பாவாடை சட்டையை
சந்தையில் புதிதாய்ப் பார்த்தே பூரித்தவள்
பாவாடை தாவணிக்கு மாறிக்
குச்சிற்குள் போய்விட்டாள்.
கால ராட்டிணத்தின் வேகத்திலிருந்து
தட்டுத் தடுமாறி தரையில் நிற்பவளுக்கு
தலையும் புரியவில்லை
காலும் புரியவில்லை.
தான் ஈன்ற ஒற்றைக் குழந்தைக்கு
பாவாடை சட்டையே பழக்கமில்லை
சில்லு நொண்டியும் தெரியவில்லை
சந்தையையும் கண்டதில்லை
குச்சும் புரியவில்லை
அலமாரியில் நிரம்பி வழிகிறது ஆடையருவி.
தூரமாய் நின்று
சாரலில் நனைவதைப் போல
ஒரே கால் சட்டைதான்
ஒரு வாரத்திற்கு என்கிறாள்!
Thenmozhi Ashok

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JULY - SEPTEMBER, 2024