INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, November 5, 2022

AIAYAAVU PIRAMANATHAN

 A POEM BY 

AIYAAVU PIRAMANATHAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

The crow caught in the dark losing its trail climbing on quietude flies
The crow that pecks at light and survive
Has similar hue as its
Softly swaying the branches turning into crow the night that knows not how to call cawing
***
The dog startled at seeing the dark barking
the night so familiar with its
keeps wagging its tail.
***
The rain pouring in the night
has the eyes of lust
The fish keep pecking at the Moon
floating in the pond
Playing merrily
Appealing to the fish that have fully swallowed the Moon
To devour it also
So brimming all over the pond and overflowing
The dark of the New Moon day.
***
Faraway
Someone in isolation was with the
sound of cough is spitting tuberculosis
Being at his side
the midnight comfors him.
***
From the wick lit
Light shines as the golden sun
As black kitten
there lies at the feet of the earthen lamp
a minuscule darkness
***
The night calls the glow worms
glittering all over the branch
as the flowering of light
As if it is carrying the sky on its crest
the tree crackles.
***
In nights that are designated for sleep
one and all go to bed
In the dream of the child alone
to whom mother had given food
showing the magical sky
there stay wide awake
a lone Moon
and a few stars.
***
Inside the eyes that are tightly shut
Afraid of the radiance blossoming in the fire
lit by father
darts in a flash and hides itself
The Night childlike.
அய்யாவு பிரமநாதன்

• வழி தவறி இருளுக்குள் சிக்கிக்கொண்ட காகம்
மரத்தின் நிசப்தத்தின் மீதேறி அமர்ந்து பறக்கிறது
வெளிச்சம் கொத்தி வாழும் காகம்
தன் நிறம் தோய்ந்திருப்பதைக் கண்டு
மெல்ல மரக்கிளைகளை அசைத்து காகமாகிக் கொண்டிருக்கிறது
கரைந்து அழைக்கத் தெரியாத இரவு.
***
இருளைக் கண்டு துணுக்குற்ற நாய் குரைத்துக் கொண்டிருக்க
பழகிப்போன இரவு
வாலாட்டிக் கொண்டே இருக்கிறது.
***
இரவில் பெய்யும்
மழைக்கு
காமத்தின் கண்கள்.
***
குளத்தில் மிதக்கும் முழுநிலவை கொஞ்சம் கொஞ்சமாக மீன்கள் கொத்தி
விளையாடிக் கொண்டிருக்கிறது
நாள்தோறும்
நிலவை முழுவதும் விழுங்கிய
மீன்களிடம் தன்னையும்
விழுங்குமாறு குளமெங்கும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது
அமாவாசை இருள்.
***
தொலைவில் யாரோ தனிமையில் இருமல் சத்தத்துடன் காசநோயை காரி உமிழ்கிறார்கள்
அருகில் இருந்து
ஆசுவாசப் படுத்துகிறது
நடுச் சாமம்.
***
ஏற்றி வைக்கப்பட்ட
திரியிலிருந்து மஞ்சள் வெயிலைப்போல் சுடர்கிறது ஒளி
கருப்பு பூனையைப்போல்
அகலின் காலடியில் சுருண்டு கிடக்கிறது
குட்டி இருள்.
***
மின்மினிப் பூச்சிகள் கிளையெங்கும் ஒளிர்வதை வெளிச்சம் பூத்திருப்பதாக சொல்கிறது இரவு
தன் தலையில் வானத்தையே சுமந்திருப்பதாக சலசலக்கிறது மரம் .
***
உறங்குவதற்காகவே
வரையறுக்கப்பட்ட
இரவுகளில் எல்லோரும் உறங்குகிறார்கள்
அம்மா ஆசைகாட்டி சோறுட்டிய
குழந்தையின் கனவில் மட்டுமே
விழித்திருக்கிறது
ஒரு நிலவும்
சில நட்சத்திரங்களும் .
***
அப்பா பற்ற வைத்த தீயில்
விரிந்து பூக்கும் வெளிச்சத்திற்கு
பயந்து இறுக மூடிக்கொண்ட கண்களுக்குள் வெடுக்கென ஓடி ஒளிந்து கொள்கிறது குழந்தைமை இரவு.


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024