TWO POEMS BY
KO.NATHAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
BORDER-CROSSING BIRD
(OR)
BIRD BEYOND BORDER
A bird that sings for the night to dawn
Had come to the tree at my entrance.
The bird that eats the broken rice-grains
that my mother flaps in the winnow
and scatters around
Tells of night’s heaviness
In a language sans words.
A bird that sheds a strand of feather and flies off
Comes alive in a flash second of yet another hour
A bird that holds a daytime upon its wings
Brings it down and places it on the tree-branch andtakes rest.
When the shade of the tree
Falls on the courtyard of the house
It draws the bird of the tree
On the ground and leaves
The bird that steals the wind
In the long hours of autumnal sunny day
Bursts open the feathers
And softly strokes the Spring season.
In the final sound of the withered leaf dropping down
Wind’s silence a droplet
The reflection of the bird on the ground
Wishes to sketch something?
when the jungle shrouded in rain
stretches and expands within dense silences
the bird smashes and breaks and throws away
the different segments of day
in the consonance of a song.
Upon the serene water
Of the river
the line drawn sipping it
is Bird’s Zen state
Ko Naathan
எல்லை கடக்கும் பறவை.
•••••••••••••••••••••••••••
இரவொன்றை விடிய
வைக்கப்பாடும் பறவையொன்று
என் வாசல் மரத்திற்கு வந்திருந்தது.
அம்மா புடைத்து போடும்
அரிசிக் குறுனல்களை
மணல்களிலிருந்து
பொறக்கிக் கொத்தி தின்னும் பறவை
இரவின் கனத்தை
சொற்களிலற்ற பாசையில் பேசுகிறது.
இறகொன்றை உதித்து பறக்கும்
பறவை
இன்னுமொரு
பொழுதின் கணத்தில் உயிர்க்கிறது.
ஒரு பகலை
சிறகுகளில் ஏந்தும் பறவை
வானின் தூரத்தை
மரத்தின் கிளையில்
இறக்கி வைத்து ஓய்வெடுக்கிறது.
மரத்தின் நிழல்
வீட்டு முற்றத்தில் விழும் போது
மரத்தின் பறவையை
மண்ணில் வரைந்து போகிறது.
இலையுதிர்க்காலம்
வெயிலின் நீள் பொழுதில்
காற்றை திருடிச் செல்லும் பறவை
சிறகுகள் உடைத்து
வசந்த காலத்தை நீவுகின்றன
உதிர்ந்து விழும்
இலையின் கடைசி ஓசையில்
காற்றின் ஒரு துளி நிசப்தம்
நிலத்தில் பறவை விம்பம்
ஏதோ வரைய விழைகிறது?
மழையில் மூடுண்ட காடு
அடர் மௌனங்களுள் விரிந்து
கிடக்கின்ற வேளை
பொழுதுகளை
பாடலின் இசைக் கோர்வையில்
தகர்த்துடைத்தெறிகிறது பறவை.
நதியின்
நிசப்த நீரின் மேல்
நீர் பருகிக் கீறும் நீர்க் கோடு
பறவையின் ஜென் நிலை .
(2)
Is lying terrified in pitch darkness
With lights not glowing.
Buddha who set out at the early hours of morn
Has not yet returned even after
Nightfall.
Will Buddha be waiting with legs aching
And starving?
He has not gone to buy rice.
Nor for buying fish
Not meat, nor Milk-powder
He had gone to buy kerosene.
There he was standing in the long queue
Throughout the day
With legs aching abominably.
For it is in the quarter bottle of kerosene
that could be had
the house as well as the place
can have light
The bullock cart used for wedding procession
goes along carrying the bride and groom alone.
The streets relieved of traffic jam
inhale pure air.
In those times when war froze
The same dogs
The same owls
The same crows
The same vultures
Were sounding the curfew enforced.
Even then with no shortage
Lights were glowing silently.
The land that turns to look at the war
Was eating nothing except the human flesh
In explosions.
Once again
It makes the people poverty-stricken
swallow bones.
The lights that the nation see
nowhere except
in the funeral pyre of the dead ones
have their wicks with oil long lost
Feeling weary and desperate
not being able to get fuel
in front of the Gas Station
pouring kerosene on himself
Buddha had committed suicide.
Ko Naathan
•
விளக்குகள் எரியாத தேசம்.
தண்ணீரிலும்,
விளக்குகள் எரிந்து ஒளிர்ந்த தேசம்.
விளக்குகள் கூடவும் இல்லாமல்
இருளடர்ந்து கும்மிருட்டில் மருளுகிறது.
முன் விடியல் காலை
பயணப்பட்ட புத்தர்
இருள் பட்டும் வீடு திரும்பவில்லை.
பசியோடு
கால் கடுக்க காத்திருப்பாரோ?
புத்தர்,
அரிசி வாங்கச் செல்லவில்லை,
மீன் வாங்கச் செல்லவில்லை,
இறைச்சி வாங்கச் செல்லவில்லை,
மரக்கறி வாங்கச் செல்லவில்லை
பால்மா வாங்கச் செல்லவில்லை.
மண்ணெண்ணெய் வாங்கச் சென்றிருந்தார்.
அவர்,
அங்கே நீண்ட வரிசையில்
முழுப் பொழுதும் நின்று கொண்டிருந்தார்.
கிடைக்கப்பெறும் கால் போத்தல்
மண்ணெண்ணெயில் தான்
ஊரும்,வீடும் வெளிச்சம் ஏறும்.
திருமண ஊர்வலம் செல்லுகின்ற
மாட்டு வண்டி
மணமக்களை மட்டுமே இழுத்து செல்கிறது.
தெருக்கள்,
வாகனங்களின் நெரிசல்களில்லாமல்
சுத்தமான காற்றை சுவாசிக்கிறது.
போர் உறைந்து போன காலத்தில்
அதே நாய்களும்,
அதே ஆந்தைகளும்,
அதே காகங்களும்,
அதே பருந்துகளும்
ஊரடங்கு சட்டத்தை ஒலித்துக் கொண்டிருந்தது.
அப்போதும் தட்டுப்பாடின்றி
விளக்குகள் மௌனமாய் எரிந்து கொண்டிருந்தன.
போரைத் திரும்பிப் பார்க்கும் தேசம்
மனிதச் சதைகளை மட்டும்
வேட்டுக்களில் தின்று கொண்டிருந்தது
மீளவும்
வறுமையில் எலும்புகளை விழுங்கக் செய்கிறது.
சுடலை,
பிணங்களின் எரி நெருப்பில்
மட்டும் வெளிச்சம் காணும் தேசம்
விளக்குகள்,
திரிகளில் எண்ணெய்
தொலைத்து வெகுநாட்கள் ஆகிவிட்டது
.
எரிபொருள் கிடைக்கவில்லை என்ற
மன விரக்தியில்
எரிபொருள் நிரப்பும் நிலையம் முன்
புத்தர்
மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்திருந்தார்.
கோ.நாதன்.
.
No comments:
Post a Comment