INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, November 5, 2022

RAMESH PREDAN

 A POEM BY 

RAMESH PREDAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


ORANGE-FRUIT BOSOM
While bargaining the price of the orange fruits and buying
the feeling of guilt comes to be
Though it is on account of Van Gogh’s Orange Sun
that painting doesn’t feel any sense of guilt
on account of Van Gogh.
Know not when Buddha’s orange-fruit eyes
would open yet
The colourscape of meditation is saffron
I know
One boob is for Kannagi
One eye alone is for Adhisakthi in the forehead
In the bay of Tamil rises at dawn
orange bosom eye-seen worn borne
FROM THE WILDERNESS
A great grand city
Uninhabited by human species
The land thoroughly drowned in the sea
Tamil language with none to speak
The contemplation of the insane
Incessant war where the foe could not be defined
The wasteland growing inside child
Great epic sans similes metaphors
A God deathless
Never-ending intoxication
A doll insatiable for children
The last tiger
It is from some one of these
starts writing itself –
My next poem.
GOAT
Halts and waits
and slips off
Upon the iron lines
The train
Within
the goat grazing
that leapt inside
terror-stricken
runs up and down
passengers none
In the speed of automation
elongates the
lone goat for the entire wagon
HE THE AUTHOR OF THOUSAND AND ONE TALES
He who wrote thousand and one tales
died one day
In no story of his
nothing of his being remained
Through thousand and one tales
he wrote thousand and one lives.
The reader who learns the entire corpus of his writings
experiences thousand and one fresh new lives
None is able to live the life of the author
He remains his own self
Never had he hidden himself inside
any tale
He keeps writing again and again
in Time’s readings infinite.
Ramesh Predan
ஆரஞ்சுப்பழ முலை
ஆரஞ்சுப் பழங்களை விலைபேசி வாங்கும்போது
குற்றவுணர்வு ஏற்படுகிறது
வான்கோவின் ஆரஞ்சுப் பரிதி நிமித்தம்
என்றாலும் அவ்வோவியம்
அடைவதில்லை வான்கோ நிமித்தம்
குற்றவுணர்வை
ஆரஞ்சுப் பழ விழிகள்கொண்ட
புத்தனின் கண்கள் எப்பொழுது திறக்கும்
எனத் தெரியவில்லை எனினும்
தியானத்தின் நிறவெளி
காவி என்பது எனக்குத் தெரியும்
ஒரு முலை கண்ணகிக்கு
ஒரு கண் மட்டுமே நெற்றியில் ஆதிசக்திக்கு
தமிழ் விரிகுடாவில் காலையில் எழுகிறது
விழிகொண்ட ஆரஞ்சு முலை
○ வெட்டவெளியிருந்து
மனிதர்களற்ற பெரிய நகரம்
முற்றாகக் கடலுக்குள் மூழ்கிவிட்ட பூமி
பேசுபவர்கள் யாருமற்ற தமிழ்மொழி
பைத்தியத்தின் யோசனை
எதிரியை நிர்ணயிக்க இயலாத தொடர் போர்
குழந்தைக்குள் வளரும் வெட்டவெளி
உவமை உருவகம் இல்லாத மகாகாவியம்
மரணமே அறியாத ஒரு கடவுள்
தெளியத் தெரியாத பெரும்போதை
குழந்தைகளுக்குத் திகட்டாத பொம்மை
கடைசி புலி
இவற்றின் ஏதோவொன்றிருந்து தன்னை
எழுதத் தொடங்குகிறது எனது
அடுத்த கவிதை
○ ஆடு
இருந்துப் பார்த்துவிட்டு
நழுவுகிறது
இரும்புக் கோடுகளின் மீது
ரயில்
உள்ளே
மருண்டு தாவியேறிய
மேய்ந்துகொண்டிருந்த ஆடு
மேலும் கீழுமாக ஓடுகிறது
பயணிகள் யாருமில்லை
இயந்திர வேகத்தில்
நீள்கிறது வண்டி
முழுமைக்குமான ஒரே ஆடு
○ ஆயிரத்தொருகதைகளை எழுதியவன்
ஆயிரத்தொரு கதைகளை எழுதியவன்
ஒருநாள் செத்துப்போனான்
அவனுடைய கதைகள் எவற்றிலும்
அவனுடைய இருத்தலின் எச்சங்கள்
எவையுமே இல்லை
ஆயிரத்தொரு கதைகளின் வழியாக
ஆயிரத்தொரு வாழ்க்கைகளை எழுதினான்
அவனுடைய மொத்த எழுத்தையும் பயிலும் வாசகன்
ஆயிரத்தொரு விதமான புதுப்புது வாழ்க்கையை
வாழ்ந்து பார்க்கிறான்
அந்த எழுத்தாளனாக யாராலும்
வாழ்ந்துபார்க்க முடிவதில்லை
அவன் அவனாகவே இருக்கிறான்
எந்தவொரு கதைக்குள்ளும் தன்னை
ஒளித்து வைக்கவில்லை
ஆயிரத்தொரு கதைகளை அவன்
மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டேயிருக்கிறான்
காலத்தின் தீராத வாசிப்புகளில்

ரமேஷ் பிரேதன்


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024