INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, June 27, 2021

INSIGHT - JUNE 2021

 




ABDUL JAMEEL

 A POEM BY

ABDUL JAMEEL

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


THE UNBROKEN SHADOW OF THE BIRD
The 'long distance' birds
go crossing the river
Their shadows fall upon the water
Yet the river remains silent
Taking the floating shadows
to be prey
when the starving fish
go behind them in hot chase
and peck at them
the calm of the river is broken
Escaping from the net of the
threatening fish
the shadow of the bird in the river
though fallen
moves on unbroken
in search of prey
day after day

Abdul Jameel


பறவையின் உடையா நிழல்
______________________
நதியை கடந்து செல்கின்றன
தொலை தூரப் பறவைகள்
அதன் நிழல் விழுந்த பின்னரும்
மௌனம் சாதிக்கிறது நதி
நீந்தும் பறவையின் நிழலினை
இரையென நினைத்து
பசியெடுத்த மீன்கள்
துரத்தி துரத்தி கொத்துகையில்
நதியின் மௌனம் கலைகிறது
மிரட்டு்ம் மீன்களின்
வலையிலிருந்து தப்பித்து
தினமும் இரை தேடிச் செல்கிறது
நதியில் விழுந்த பின்பும்
உடையாமல் செல்லும் பறவையின் நிழல்
ஜமீல்

MULLAI AMUTHAN

 A POEM BY

MULLAI AMUTHAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

She opened the door
to draw Kolam at the entrance
Saw a wreath there.
Terribly anguished
she screamed to those within.....
Who could it be….?
As there was a small piece of paper
she read it.
“For tomorrow’s death’
It said.
She kept staring at it.

வாசலில்
கோலம் போட திறந்தாள்.
மலர்வளையம்
இருப்பதைக் கண்டாள்.
துடித்துப்போய்
உள்ளே குரல் கொடுக்க ....
யாராய் இருக்கும்..?
துண்டுக்காகிதம் இருக்க படித்தாள்..
'நாளைய சாவுக்காய்'
என்றிருந்தது..
அவள் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

முல்லை

YAVANIKA SRIRAM

 A POEM BY

YAVANIKA SRIRAM

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Those who cook food for kids
should travel with their dry-mouthed puppies in hot summer searching for brook –water.
Softening the grain-flours as dust
would prove soothing to children’s milk-teeth.
Further mixing clay with it and adding pungent flavor
_filling their bellies with it and sending them away
would take care of them till the time
they return home from school.
Outstanding kids would find their way
into the railways station
and almost snatch the things held by the passengers.
No need to be educated for this.
Then they should develop acidity
in low and proper measures.
For carious tooth due to sweets
their mother squeezes the entire tube of
clove-fragrant toothpaste.
One egg half-a-cup milk balanced diet.
Waking up the next dawn
have the children grown
Our children have never stood in comparison
with those in the neighbourhood.
The grown-ups chitchatting about their fruits and food
is sheer waste
In petrol bunks petty shops
motels and fast food outlets during joy-tours_
the oven should always be on
munching of grains should go on
rhizomes meat pastries
before they scream

Yavanika Sriram

குழந்தைகளுக்கு உணவு தயாரிப்பவர்கள்
கடும் கோடை காலத்தில் வாய் உலர்ந்த நாய்க்குட்டிகளோடு சுனைநீர் தேடிப் பயணிக்க வேண்டும்
தானிய மாவுகளை தூசுபோல ரொட்டிக்கு மென்மையாக்குவது குழந்தைகளின்
பால் பற்களுக்கு இதமானது
மேலும் அதில் களி மண்ணை கலந்து காரமிட்டு
அவர்களின் வயிற்றை நிறைத்து அனுப்புவது
பள்ளிக்கல்வியிலிருந்து வீடு திரும்பும் காலத்திற்கும் போதுமானது
மிகச்சிறந்த குழந்தைகள் இரயில் நிற்கும் நிலையத்திற்குள் புகுந்து பயணிகளின் கையில் உள்ள பண்டங்களை ஏறக்குறைய பறித்துக்கொள்கிறார்கள்
இதற்கு கல்வி தேவையில்லை
பிறகு அவர் காரத்தை குறைவாக
சரியாகப் பயில வேண்டும்
இனிப்புகளால் பற்களில் சொத்தை
உண்டாகும் போது அவர்களின் வாய்க்குள் கிராம்பு பணக்கும் முழுப் பேஸ்டையும் அம்மா பிதுக்கிவிடுகிறாள்
ஒருமுமுட்டை அரைக்கப் பால் சரிவிகித உணவு
அதிகாலை எழுந்தவுடன் குழந்தைகள் வளர்ந்து விட்டுருக்கிறார்களா
நமது பிள்ளைகள்
அண்டை வீட்டாரிடமிருந்து
ஒருபோதும் ஒப்பு நோக்கப்படாதவர்கள்
பெரியவர்கள் தங்களின் பழம் உணவுகள் பற்றி கதைப்பது
அநாவசியமானது
பெட்ரோல் பங்கிலும் பெட்டிக்கடைகளிலும்
மோட்டல்களிலும் உல்லாசப்பயணங்களின் போது துரித உணவங்களிலும்
அடுப்பு சதா எரிந்து கொண்டிருக்கவேண்டும்
தானியங்கள் அரைபடவேண்டும்
கிழங்குகள் இறைச்சிகள் பணியாரங்கள்
அவர்கள் கூச்சலிடும் முன்

YUMA VASUKI

 A POEM BY

YUMA VASUKI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


THE ‘MILK OF HUMAN KINDNESS’

Calling out to a boy
beckoning him to come closer
and grinning cunningly
I pinched him softly.
Moving away in a leap
he glares at me.
“Ok, pinch me in return”.
And, he fell into my trap
all too willingly.
The pinches that he was giving
one after another
gritting his teeth all the while
press into my hands all too deep,
leaving imprints.
With a laugh I say
“Not at all paining”.
Collecting all his strength in his nails
he strives with all his might
to tear off my skin.
“Do you feel the pain?”
All his avid queries
get drowned in my indifferent laughter.
“Oh, is this your muscle-power?
Absolutely no pain at all!”
Suffering humiliation to the core
standing frozen for a few seconds
in a flash his mouth
took my hand in a tight grip…
“Do you feel the pain?
Do you feel the pain?”
As the teeth pierced into my flesh
deeper and deeper,
as the pain grew worse
I laugh all too loudly.
The body quivers and remains still.
The heart, turning wet, blooms.

ஈரம்
ஒரு சிறுவனை அருகழைத்து தந்திரமாக இளித்தபடி
மெல்லெனக் கிள்ளுகிறேன்.
துள்ளிக் கோபத்துடன் விலகி முறைக்கிறான்.
“வேண்டுமானால் பதிலுக்கு நீ என்னைக் கிள்ளிவிடு”
விருப்புடன் சிக்கினான் விரித்த வலையில்.
பற்களைக் கடித்தபடி என் கரங்களில் அவன்
மாறி மாறிக் கிள்ளும் தடங்கள் ஆழப் பதிகின்றன.
சிரித்துக்கொண்டு சொல்கிறேன்,
“எனக்கு வலிக்கவேயில்லை…”
சக்தியெல்லாம் தன் நகங்களில் குவித்து
பிய்த்தெடுக்க முயல்கிறான் என் சருமத்தை.
“வலிக்கிறதா….? வலிக்கிறதா…?”
என் அலட்சியச் சிரிப்பில் அமிழ்ந்தன
ஆர்வக் கேள்விகள் எல்லாம்.
“இவ்வளவுதானா உன் பலம்
எனக்கு வலிக்கவேயில்லை!”
அவமானப்பட்டவனாய் சில நொடிகள் திகைத்து
சட்டென்று கவ்வுகிறான் என் கரத்தை.
“வலிக்கிறதா… வலிக்கிறதா…”
பற்கள் பதியப்பதிய வலி மீதுற மீதுற
பெருங் குரலெடுத்துச் சிரிக்கிறேன்.
சிலிர்த்தடங்குகிறது உடல் _ மனம்
ஈரம் பட்டுக் கிளைக்கிறது.
யூமா வாசுகி
(சாத்தானும் சிறுமியும் தொகுப்பிலிருந்து)

SHANMUGAM SUBRAMANIAM

 A POEM BY

SHANMUGAM SUBRAMANIAM


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



Ere I set right the wrist-watch that shows time
a little ahead
I should come backward.
After removing it
I was a little slow in setting it right.
In the anti-clockwise motion the two hands
have reached the Now.
When the one standing sat
It was you going there softly rubbing against the shoulder
who called me
So my heart wants to say.
The other shadow is not to be seen at the feet.
My shadow has also donned a new form.
In the fingers the heat of another palm
After wearing the wrist-watch when I glanced
With no hands in the clock front and back
suffocating heat pervading my entire being.

Shanmugam Subramaniam

நேரத்தைக் கொஞ்சம் கூடுதலாகவே காண்பிக்கும்
கைக்கடிகாரத்தை திருத்துமுன்
நான் பின்னோக்கி வரவேண்டும்
கழற்றியபின் திருத்த நேரமாகிவிட்டது
எதிர்சுழற்சியில் முட்கள் தற்பொழுதை
அடைந்துவிட்டன
நின்றிருந்தவன் அமர்ந்ததும்
அங்கே தோளுரசி சென்ற நீதான்
என்னை அழைத்ததாகச்
சொல்ல விழைகிறது உளம்
இன்னொரு நிழலைக் காலடியில் காணவில்லை
என் நிழலும் வேறு வடிவம் பூண்டுள்ளது
விரல்களில் வேறொரு உள்ளங்கையின் வெம்மை
மீண்டும் கைக்கடிகாரத்தை அணிந்தவுடன் பார்க்கையில்
முட்கள் முன்னும் பின்னும் அல்லாது போக
உடலெங்கும் தகிப்பின் வெளியேற்றம்.

- எஸ்.சண்முகம் -








MOHAMAD ATHEEK-SOLAIKILI

 A POEM BY

MOHAMAD ATHEEK-SOLAIKILI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



MYRIAD-EYED WATER!

When I go for bathing
Water would rustle
That, its exclusive language
would sound as if it is asking me something
When I extend my head without responding
it would pour hard on it.
When I apply soap
along with my eyes
the water would also wring its eyes.
Wonder how many eyes
does the Water have
Water keeps viewing us
What does it ask
I understand not
With questions aplenty
Water is running through the length
and breadth of my body
My very body
is a query
What are the queries that the
Water flowing through it asks
I wipe my head
Water failing to get an answer
cries
and its tears seep out in droplets.
In its eyes too shines
the dream of rain.
When I close the tap tightly
It seems like
the water
gushing forth enraged
and asking me to come again
with due responses
finally subsides
Of course this is for the time being.
For water never calls it a day.
it continues to breathe all the way.

Mohamed Atheek - Solaikili

தண்ணீருக்கு எத்தனை கண்கள்
குளிக்கப் போனால்
தண்ணீர் சலசலக்கும்
அது அதனின் பாஷை
ஏதோ ஒன்றை
என்னிடம்
வினவுவது போன்றிருக்கும்
நான் பேசாமல் தலையைக் கொடுக்கும்போது
என் மண்டையில் உறைக்கும்படி
சற்று பலமாகவும் விழும்
சவர்க்காரம் இடும்போது
தண்ணீரும் கண்ணைக் கசக்கும்
தண்ணீருக்கு
எத்தனை கண்கள் இருக்கிறதோ
தண்ணீரும் நம்மை
பார்த்துக்கொண்டிருக்கிறது
தண்ணீர் என்ன கேட்கிறது
அது எனக்கு விளங்கவில்லை
பல கேள்விகள் கேட்டபடிதான்
என் தேகமெங்கும் ஓடுகிறது
தண்ணீர்
என் தேகமே ஒரு கேள்வி
அதில் தண்ணீர் ஓடி ஓடி
எழுப்பும் கேள்விகள் என்னென்ன
நான் தலை துவட்டுகிறேன்
விடை கிடைக்காத தண்ணீர்
அழுது
சொட்டுச் சொட்டாக வழிகிறது
தண்ணீருக்கு கண் இருக்கிறது
அதன் கண்களுக்குள்ளும்
மழையின் கனவு மினுங்குகிறது
நான் தண்ணீரின் குழாயை
திருகி
மூடும்போது
சீறிப் பாய்ந்துவிட்டு
திரும்பவும் வா
எனக்கான விடைகளோடு
என்று தண்ணீர்
அடங்குவதுபோல் இருக்கிறது
பலமாக மூச்சுவிடுகிறது
இது தற்காலிகமே
தண்ணீர் நிரந்தரமாய்
அடங்குவதில்லை
தண்ணீரின் மூச்சு குறையாது

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024