THREE POEMS BY
MANARKAADAR
(RAJAJI RAJAGOPALAN)
Translated into English by Latha Ramakrishnan(*first Draft)
I would always sympathize with the female dancer
in the last row.
She would be dark and sometimes fat
She would have told many of her friends
“I am also dancing in it, you know!”
She would have bought them tickets too
spending from her pocket.
As soon as her dance is over
I would also get up and leave.
Can an ordinary person
honour an ordinary dancing girl
in any better manner…..
சினிமாவில் வரும் க்ரூப் டான்ஸில்
கடைசி வரிசையில் ஆடும் பெண்மீது
எப்போதுமே எனக்கு அனுதாபம் உண்டு
கருப்பாகவும் சிலவேளை குண்டாகவும் இருப்பாள்
நானும் இப்படத்தில் ஆடுகிறேண்டி என்று
நண்பிகள் பலருக்குச் சொல்லியிருப்பாள்
தன்னுடைய காசில் டிக்கட்டும்
வாங்கிக் கொடுத்திருப்பாள்
அவளுடைய நடனம் முடிந்ததும்
நானும் எழுந்துவந்துவிடுவேன்
ஒரு சாதாரண நடன மங்கைக்கு
ஒரு சாதாரண மனிதன்
இதற்குமேல் கௌரவம் எதுவும்
கொடுத்துவிட முடியுமோ
(2)
In the MacDonald coffee cup
that someone had gulped and thrown
Yesterday’s rain was brimming.
Suffice it gets filled up once
It would continue to brim
So also Life, it seems....
யாரோ குடித்துவிட்டு எறிந்த
மெக்டானால்ட்ஸ் கோப்பி குவளையில் நிறைந்திருந்தது
நேற்றுப் பெய்த மழை.
ஒருமுறை நிறைந்துவிட்டாலே போதும்
தொடர்ந்து நிறைந்துகொண்டிருக்கும்
வாழ்க்கையும் அப்படித்தான் போலும்.
(3)
The glory of having scaled Himalayas
would be his
who has descended alive.
Not just in ascent
But in descent too there is
Life Glorious.
who has descended alive.
Not just in ascent
But in descent too there is
Life Glorious.
இமயத்தில் ஏறிய பெருமை
உயிரோடு
இறங்கியவனுக்கு மட்டுமே கிடைக்கும்.
ஏற்றத்தில் மட்டுமல்ல
இறக்கத்திலும் இருக்கிறது வாழ்வு
No comments:
Post a Comment