INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 27, 2021

YAVANIKA SRIRAM

 A POEM BY

YAVANIKA SRIRAM

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

While waiting for God
It had happened thus.
My dear, wonder at which century you had left me
I am still struggling for a lone line of Love Divine.
I embrace an egg
At the instant it breaks
In East the twilight sun
descends into the ocean.
By way of response
I place my lips upon your teary reddish eyes and quench my thirst
Along the river course the crops would ripen or in the spell of your growth
I was on its shore with a hook.
When the animals give birth to their calves
I witnessed in my lifetime
your placenta and water seeping at the slopes
and torrential downpour.
The Moon-juice that the fruity trees dropped
Along those boobs thousands of miles I go on foot
With the snowfall proving unbearable
late-night hours in your tight embrace
Unable to bear the summer a spring in your lips
Yes, there they dig out iron, here they cremate the corpses
There bridges for Paradise being constructed.
Till our jackfruits turn ripe
Till the heat of your urine subsides
When such demonic times draw closer
In truth during your pains periodical gripped by ages bygone
that had betrayed everything
My Love
atleast a lone line in my language
tasting bitter in my throat deep down
I would be writing somehow.
Yavanika Sriram
கடவுளுக்காக காத்திருந்த போது
இப்படி நிகழ்ந்து விட்டது
அன்பே எந்நூற்றாண்டில் கைவிட்டு போனாயோ
உன்னதமான ஒரு காதல் வரிக்கு இன்னும் தடுமாறுகிறேன்
ஒரு கோழி முட்டையை தழுவுகிறேன்
அது உடையும் நேரம் கிழக்கே
கடலிறங்குகிறது அந்திச் சூரியன்
பதிலாக உன் கண்ணீர் மல்கும் செவ் வரிப்படலங்களில் வாய் வைத்து தாகம் தீர்க்கிறேன்
நதியின் வழியில் கதிர்கள் முற்றும் அல்லது நீவளர்ந்துவந்த பருவத்தில்
ஒரு தூண்டிலுடன் அதன் கரையில் இருந்தேன்
மிருகங்கள் கன்றுகளை ஈனும் போது உன் பனிக்குடத்தையும் சரிவுகளில் நீர்க்கசிவையும் பெரும் அடைமழையையும் வாழ்நாளில் கண்டேன்
கனிமரங்கள் உதிர்த்த நிலவின் சாறு
அந்த முலைகளின் வழியே பல ஆயிரம் மைல்கள் என் கால்நடை
பனிதாங்காமல் உன்னுடன் ஜாமங்களின் இறுக்கம்
கோடை தாங்காமல் உன் இதழ்களில் ஒரு நீரூற்று
ஆமாம் அங்கே இரும்பைத்தோண்டி எடுக்கிறார்கள் இங்கே பிணங்களை எரியூட்டுகிறார்கள்
அங்கே சொர்க்கத்திற்கான பாலங்கள் கட்டப்படுகின்றன
நாம் பலாக்கள் கனியும் வரை
உனது சிறுநீர்சூடு தணியும் வரை
அப்பிடியான கொடுங்காலங்கள் நெருங்கும்போது
உண்மையில் அனைத்தையும் கைவிட்ட கடந்த காலங்கள் பற்றிய உன் விடாய் வலிகளின் போது அன்பே
ஒற்றை வரியேனும் எனது மொழியில் அது அடித்தொண்டையில் கசக்கும்படி எழுதித்தான் இருப்பேன்.


  • Anaamikaa Rishi
    கவிஞருக்கு நன்றி. திருத்தங்கள் தேவையெனில் தெரிவிக்கவும். நிறைய கவிதைகள் பிடித்திருந்தும் அவை மொழிபெயர்ப்புக்குப் பிடிபடுவதில்லை. இந்தக் கவிதையும் ஒருவகையில் அப்படியே. செவ்வரிப்படலம் எதைக் குறிக்கிறது. விடாய் - தாகவிடாயா மாதவிடாயா - இப்படி நிறைய புரிந்தும் புரியாமலுமான வார்த்தைகள் வரிகள் அவற்றின் இணைவுகள்... கடலை ஒலிநயத்திற்காக ஆங்கிலத்தில் ocean ஆக மாற்றினேன் - எல்லாம் நீர்மயம் என்ற தத்துவார்த்தப் பார்வையில்! புரிந்தும் புரியாமலுமாயிருந்தும் கவிதையில் புரிந்தது உண்டாக்கிய நெகிழ்வில், மொழிபெயர்ப்பு கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும்(????) பெரியமனதுக்காரத் தோழர் யவனிகா கோபித்துக் கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில் கவிதையை மொழிபெயர்த்துப் பதிவேற்றிவிட் டேன்! நாளை மொழிபெயர்ப்பை மேலும் செம்மைப்படுத்த வழி பிறக்கும் என்று நம்புகிறேன்.
    3
    • Like
    • Reply
    • 2w
    • Edited
  • Yavanika Sriram
    செவ்வரிப்படலம் கண்ணின் வெண்படலம்தான் தோழி
    விடாய் தாகத்திற்கும் உதிரநாட்கள் இரண்டிற்கும் ஆனதுதான்
    மிகச்சிரமமான இக்கவிதையை மொழிபெயர்க்கத்தேர்ந்தமைக்கு எனது நன்றி
    கூடார்த்தங்கள் ஆங்காங்கே உள்ள இதை மறுபடி உங்களால் எளிதாகச் செப்பனிடமுடியும்
    வாசகங்களுக்கிடையே
    சைலன்ஸ் வந்திருந்தால் அருமைதானே
    எனக்கு ஆங்கிலத்தின் நுட்பங்கள் தெரியாது
    இந்த அளவில் உங்களுக்கு அன்பும் நன்றியும் தோழமையே

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE