A POEM BY
RAMESH PREDAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
(*with corrections suggested by the poet duly incorporated)
Initially none gave it a second glance
In very fine handwriting line by line
his sentence stretched on and on
With an arrow mark at the spot where the wall ended
He wrote on the next wall.
Day and night
He continued to write.
As he went on writing
a crowd read them and pursued him
They who regarded the house deserving neither a whitewash
nor posters
remained hesitant to demolish it and build new quarters
His Word went along streets and lanes
lengthening infinitely.
Taking copies of it, some went behind.
In the oval-shaped city of Pudhucherry
an Epic written
commencing from the 13th of March 1885
concluding on the 8th of October 1899
disappeared for ever
in the city’s makeover.
Today those who had taken copies of it are no more
Nor are the facsimiles.
In pale and dim letters
a few similes and metaphors there
on walls ruined; forsaken.
தொலைந்த காப்பியங்களுள் ஒன்று
================================
நகரத்துச் சுவர்களில் அவன் எதையோ
எழுதிக்கொண்டிருந்தான்
ஆரம்பத்தில் அதை யாரும் பொருட்படுத்தவில்லை
அழகிய கையெழுத்தில் வரிவரியாக வாசகம்
வளர்ந்துகொண்டே போனது
சுவர் முடியும் இடத்தில் அம்புக் குறியிட்டு
அடுத்த சுவரைச் சுட்டினான்
இரவு பகலென அவனது எழுத்துத் தொடர்ந்தது
அவன் எழுதஎழுத ஒரு கூட்டம்
அதை வாசித்தபடியே பின்தொடர்ந்தது
யாவரும் சுவருக்கு வெள்ளையடிக்கவோ
சுவரொட்டி ஒட்டவோ
தேவையற்றதெனக் கருதிய வீட்டை
இடித்துப் புதியது கட்டவோகூடத் தயங்கினர்
தெருத்தெருவாக அவனது வாசகம்
நீண்டுகொண்டே போனது
அதைக் காகிதத்தில் படியெடுத்துக்கொண்டே
சிலர் சென்றனர்
நீள் வட்டவடிவப் புதுச்சேரி நகரத்தில்
1885 மார்ச் 13ஆம் நாள் தொடங்கி
1899 அக்டோபர் 8ஆம் நாள் முடிய
எழுதப்பட்ட ஒரு காப்பியம்
முற்றாக நகரமாற்றத்தில் மறைந்துவிட்டது
இன்று அதைப் பிரதியெடுத்தவர்களும் இல்லை
பிரதியும் இல்லை
மங்கிய எழுத்துகளுள் சில
உவமைகளும் உருவகங்களும்
கைவிடப்பட்ட இடிந்த சுவர்களில்
(சக்கரவாளக்கோட்டம் / 2004.)
No comments:
Post a Comment