INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 27, 2021

KO.NAATHAN(EGATHUVAN)

 A POEM BY

KO.NAATHAN(EGATHUVAN)

Translated into English by Latha Ramakrish nan(*First Draft)

THE LAND GOD DISOWNED
AND RAN AWAY
Along the footprints of God who had run away
disowning his mother land filled with flesh and blood
as leftovers remain
Human beliefs
Declaration of Enlightenment that failed to
materialize.
War
The burial pit of oppressors taken shape
in the descendant of someone unknown
Alas, in the Bodhi tree left alone in the city
where the oppressors had arrived
who had sown venom
claiming that it would provide shade
for breathing alive.
Is it on the death leaf where God’s sanctity
withers and falls off?
God’s existence between the land
where our ancestor-clan was butchered,
annihilated and betrayed
is devoid of redemption, nothing else.
Whoever be the Enlightened God,
attaining Parinirvana upon the land
where blood springing and flowing
and choking the soil
turned into a a shrine and settled therein
and settled therein,
compassion is the teary language of
calloushelplessness.
The clan that has lost its freedom
has lost its God also
a century ago. Yes?
Am I the wise Buddha made into God
of another ethnic group
forcibly settled
in the lands of the aboriginals?
As long as
this soil
this clan
this language
not apprehending from the centre of
spiteful atmosphere
the Secret of the Source
even God’s shade
is Blood made.

Ko Naathan

கடவுள் மறுத்தோடிய நிலம்.

நிணமும், குருதியும் அப்பிய
சொந்த நிலத்தை விட்டு மறுத்தோடிய
கடவுளின்
காலடித் தடங்களில் எஞ்சிக் கிடக்கிறது
மனித நம்பிக்கைகள்
நிறைவேறாமல் போன ஞானப் பிரகடனம்.
போர்,
யாரோ ஒருவருடைய வழித் தோன்றலில்
தோற்றுவிக்கப்பட்டியிருக்கும்
அடக்குமுறையாளர்களின் மரணக்குழி.
ஆக்கிரமிப்பாளர்கள் கண்டடைந்த
நகரமெங்கும் தனித்து விடப்பட்ட
போதி மரத்தில்
உயிர்ப்புக்கான நிழல் தருமென்று
யார் வன்மத்தை விளைவித்திருந்தது?
கடவுளின்,
புனிதம் உதிர்ந்து விழும் மரண இலையிலா ?
மூதாதைய இனம் கொன்றழித்து,
வஞ்சிக்கப்பட்ட
நிலத்திற்கும், ஆன்ம நிலைக்குமிடையியே
கடவுள் இருப்பு,
விமோசனமற்றது தவிர, வேறொன்றுமில்லை.
இரத்தம் பீறிட்டு மண்ணுக்கிய
நிலத்தின் மேலெழும்
பரிநிர்வாணமடைந்த -எந்த
கடவுளை ஆலயமாக்கி
குடியமர்த்தினாலும்,
பரிவு என்பது இயலாமையின் அழுகைமொழி.
சுதந்திரம் தொலைத்திருக்கும் இனம்,
கடவுளையும்,
தொலைத்து நூற்றாண்டு கடந்து விட்டது.?
பூர்வீகக் குடிகளின் நிலங்களில்
அத்துமீறலில் திணிக்கப்பட்ட
மற்றுமொரு இனத்தின்
கடவுளாக்கப்பட்ட ஞானப் புத்தன் நான் ?
இந்த நிலம்,
இந்த இனம்,
இந்த மொழி
வெறுப்பு சூழலின் மையத்திலிருந்து
மூலப் பொருளின் இரகசியத்தை
அறியாத வரை
அந்த கடவுளின் நிறமும், குருதி.

கோ.நாதன்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024