TWO POEMS BY
RAGAVAPRIYAN THEJESWI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
(1)
Seeing the skin peeled-off by my poem-snake
Leaving the snake
They are all out to thrash me…
As my poem-snake
is crawling in search of Truth
in its skin being discarded time and again
There might be Truth sticking.
But
not just my poem
but also me _
venom-free.
என் கவிதைப்பாம்பு
உரித்துப்போட்ட சட்டையைப்
பார்த்து விட்டு
பாம்பைவிட்டுவிட்டு
என்னை அடிக்கத் துடிக்கிறார்கள்..
என் கவிதைப்பாம்பு
உண்மையைத்தேடி
ஊர்ந்துகொண்டிருப்பதால்
அவ்வப்போது உரிக்கும் சட்டையில்
உண்மை ஒட்டியிருக்கலாம்..
ஆனால்..
என் கவிதையில் மட்டுமல்ல
என்னிடமும் விஷம் இல்லை...
ராகவபிரியன்
(2)
It is in that footpath
we can see the hues and shades of
Human legs on the move.
Flying Red
Ultimate Black
Luscious Yellow
So a lot more ….
These days
legs wear footwear
so that the speed-hue of the feet
stay intact.
The climax of human walk
would lie still as the slippers torn.
In the tinge of soil
on wayside
It is in a corner where the sweat-pools of
speeding human walk
stagnate
The man who stitches the Speed
Sits on…
Still
in the Indian shade.
In front of him
whatever the haste be
it has to stand
with the back bent
as speed breaker….
In the hue of head bowed down….
As we keep pouring the time of stitching
any and everything
into the measure of eons
it would go on receiving and absorbing
the hue of patience
would be glittering with nil colour.
It is for you to learn
that your haste is a waste
That the footwear tears off
and lie stiff and erect all at once
along your paths
as speed-breakers.
Stitch on your own
the tattered speed
and the hours indeed.
and the slippers
Patience
Yourself…
and the hues of speed
that you had turned worn out
and tattered.
Ragavapriyan Thejeswi
•
அந்த நடைபாதையில்தான்
மனித கால்களின்
வேகத்தின் வண்ணங்களை
காணமுடிகிறது..
அதிவேகச் சிகப்பும்
அந்திம கருப்பும்
சிருங்கார மஞ்சளும்
இன்ன பிற நிறங்களும்...
இப்போதெல்லாம்
கால்கள் வேகவண்ணம் தேயாமலிருக்க
செருப்பணிகின்றன..
வேகம் கூடும்
மனித நடையின்
உச்சம்
அறுந்து விழும்
செருப்பாய் தேங்கும்..
மண்ணின் நிறத்தில்..
பாதையின்
ஓரங்களில்
மனித நடை வேகத்தின்
வியர்வைக் குட்டைகள்
தேங்கிக் கிடக்கும்
ஒரு மூலையில்தான்..
அறுந்துகிடக்கும்
வேகம் தைக்கும் தொழிலாளி
அமர்ந்திருக்கிறான்..
இன்னமும்
இந்திய நிறத்தில்..
அவன் முன்னே
எந்த வேகமும்
வேகத் தடையென
முதுகு வீங்கி
நின்றாக வேண்டும்..
தலை குனியும் நிறத்தில்...
எதையும் தைக்கும் நேரம்
யுகங்களின் அளவையில்
ஊற்ற ஊற்ற
வாங்கிக் கொண்டே இருக்கும்..
பொறுமையின்
நிறம் வண்ணங்களற்று
மின்னிக்கொண்டிருக்கும்..
உன் வேகம்
தேவையற்றதென
நீ அறியத் தான்
செருப்பின் வார் அறுந்து
வேகத் தடையென
உன் பாதைகளில்
திடீரென நிமிர்ந்து கிடக்கிறது..
தைத்துக் கொள்
அறுந்த
வேகத்தையும்
பொழுதுகளையும்
செருப்பையும்
பொறுமையையும்
உன்னையும்...
நீ தேய்த்துக் கிழித்த
உன் வேக வண்ணங்களையும்...
ராகவபிரியன்...
No comments:
Post a Comment