INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 27, 2021

MALINI MALA

 A POEM BY

MALINI MALA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

After you had got up and left
The seat remains vacant still.
She a recent acquaintance
seems to understand something
Yet she can’t become You.
No matter whoever pleads
some spots can be given away to none
I contend
She who insists on occupying that seat
vacated by thee
argues that friendship is not just an empty word
within word.
These days
when I am wrecked
weary lost and worn out
My hands remain cold.
Yet the all too precious gooseberries
meant for thee,
scattered all over my garden _
I am not ready
to offer them to anybody.
Malini Mala

நீ எழுந்து சென்ற பின்
இன்னும் காலியாகவே இருக்கின்றது
அவ்விருக்கை.
அண்மையில் அறிமுகமானவள்
சற்றுப் புரிந்து கொண்டவள் போலிருக்கிறாள்
எனினும் அவள் நீயாகவில்லை.
யாரெவரும் யாசித்தும்
சில இடங்களை என்னால் யாருக்கும்
கொடுத்துவிட முடிவதில்லை என்கிறேன்.
உனதந்த இருக்கைக்கு அடம்பிடிப்பவள்
நட்பு வார்த்தைக்குள் அடங்கும்
வெறும் வார்த்தையல்ல என்கிறாள்
இப்போதெல்லாம்
நான் உடைவுறும் போதும்
சோர்வுறும் போதும்
என் கரங்கள் குளிர்ந்து கிடக்கின்றன
எனினும் ,
என் தோட்டம் முழுதும்
உதிர்ந்து கிடக்கும் உனக்கான
அற்புத நெல்லிக் கனிகளை
எவர்க்கும் கொடுக்க நான் தயாரவதில்லை.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024