INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 27, 2021

AZHAGIYASINGER

 A POEM BY

AZHAGIYASINGER


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


So far the upstairs portion to dwell in
has been a small one
separated into three sparrow nests
If hand raised
the fan would slash it
Blinding glow through the window
making the eyeballs roll and
almost fall
Adjacent house opposite house
cow dung, gutters
Mosquitoes for merrymaking
_So the street would be seen
through the window
In the middle room
a place for cooking
and for father alone
to lie down and roll over
Grandma and younger brother
on the floor
Walls torn with cracks
During summer
heat being unbearable
The rain
twining chains through the window
The legs stepped out
would return muddy
Father in government job
Grandma to cook
for us in schools....
Sixteen long years have gone by
since the day my mother breathed her last
bidding goodbye.
Chandramouli Azhagiyasingar


1986ல் அம்மாவைப் பற்றி நான் எழுதிய கவிதையைப் பகிர்கிறேன்.
இதுவரையில்
மாடியில் குடியிருக்க
இருந்தது சிறிய பகுதி
மூன்று குருவிக்கூடுகளாய்ப் பிரிந்து நின்று
கையைத் தூக்கினால்
பதம் பார்க்கும் மின் விசிறி
விழி தெறித்து விழப்பார்க்கும்
சன்னல் வெளிச்சங்கள்
பக்கத்து வீடு, எதிர்த்த வீடு
மாடுகளின் சாணம், சாக்கடைகள்
சந்தோஷப்படுத்தக் கொசுக்கள்
என்று சன்னல் வழியே தெரியும் தெரு
மத்ய அடுக்கு அறையில்
சமையல் பண்ணிச் சாப்பிட
அப்பா மட்டும்
படுத்துக்கொண்டு புரள ஓரிடம்
பாட்டி தம்பி கீழே
விரிசலாய் கிழிந்த சுவர்கள்
வெயில் காலத்தில்
வெயிலாய்த் தகிக்க
மழையோ
சன்னல் வழியே கம்பிபோட
வெளியே எடுத்து வைத்த
கால்கள் திரும்பும் சேற்றுடன்
அப்பா அரசாங்கத்தில்
படித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு
சமையல் செய்துபோட பாட்டி
அம்மா செத்துப்போய்
ஆயிற்றுப் பதினாறு வருடங்கள்.

- அழகியசிங்கர்
(1986ஆம் ஆண்டு எழுதிய கவிதை)


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE