TWO POEMS BY
YUMA VASUKI
for those tipplers
pleaded with one fully drunk and
on his way out
slipped from hand and fell on the floor.
As he bent to collect them
a miracle takes place….
Some marbles slipping from his shirt-pocket
scattered on the floor tinkling.
Bonding all there at once
they keep running on and on.
Stalled they were
at the childhood of all those
looking at them and floating
in times bygone.
As the boy stood there hesitant, shocked
One being merciful picked up that which lay by his side
and gave it to the boy.
With love swelling inebriated
another followed suit.
Hands too many
softening in a sense of unbearable guilt
gathered the marbles and gave them to the boy
as blessings.
மதுக்கடையில் உருளும் கோலிக்குண்டுகள்
யூமா வாசுகி
குடிப்பவர்களுக்குக் குற்றேவல் புரிந்து
அலைக்கழிந்த சிறுவன்
நிறைந்த போதையில் வெளியேறும் ஒருவனிடம்
இறைஞ்சிய சில்லறை
கைந்ழ்வு விழுகிறது தரையில்.
எடுக்கக் குனிகையிலோ
நிகழ்கிறதொரு அற்புதம்….
அவன் சட்டைப்பையிலிருந்து தவறி
கலீரிட்டுச் சிதறின கோலிக்குண்டுகள்.
அத்தனை பேரையும் சட்டென இணைத்துக்கொண்டு
நெடுக ஓடுகின்றன அவை.
கடந்த காலங்களில் மிதந்து
பார்த்திருந்தவர்களின் பால்யத்தில்
தட்டி நின்றன.
தயங்கித் திகைத்த சிறுவனிடம்
கருணை கூர்ந்து ஒருவன்
தன்னருகே கிடந்ததை எடுத்துக் கொடுத்தான்.
போதை மிகைத்த அன்புடன்
மற்றொருவனும் அவ்வாறே செய்தான்.
தாளாக் குற்றவுணர்வில்
நெகிழ்ந்த கரங்கள் பல
ஆசிகளெனக் கோலிக்குண்டுகளைப்
பொறுக்கிச் சேர்த்தன அவனிடம்.
2. THROUGH THE PASSAGE OF TIME....
Let the candy that I am
giving to this child
to eat and savour
taste sweet to the
Children of all ‘Ages’.
I caress the eye-lids of this
kid.
They would never lose anything
sweet and precious.
Let this kiss press itself
on all the cheeks and cause smile to blossom.
There is none outside
my embrace that’s
nurturing this child
which remains all engrossed in me
without a worry in the world.
Placing my hand on this
tiny head
I wish well and bless
all the children who I
have so far come across
and even beyond.
Here, all those lives have
become wholesome.
The all too precious world
opens its glittering stripes
wondering
‘Oh, Love, is your very quality
so divine!’
In this bus so overcrowded
someone’s child
sits in my lap.
A few minutes right
to take care of it
has come my way.
Oh, my fellowmen-suffering brethren
It is but my stars that
I have offered to your sky.
Even if one ray of light is lost
You are answerable.
For my invaluable treasures
I have appointed none save you
as security personnel.
Do keep them safe and secure.
சில நிமிடங்களில் யுகங்களுக்கு
யூமா வாசுகி
(சாத்தானும் சிறுமியும் கவிதைத் தொகுப்பி லிருந்து)
இந்தக் குழந்தைக்கு நான்
சுவைக்கத் தருகிற மிட்டாய்
அனைத்துக் குழந்தைகளின் காலத்திலும் இனிக்கவேண்டும்.
இக் குழந்தையின் இமைகளை வருடுகிறேன்.
என்றைக்கும் எந்த அருமையையும் இவர்கள் தவறவிட மாட்டார்கள்.
அத்தனை கன்னங்களிலும்
இந்த முத்தம் பதிந்து
குறுஞ் சிரிப்பை மலர்த்தட்டும்.
எந்தக் கவலையுமற்று என்னோடு ஒன்றியிருக்கும்
இக்குழந்தையைப் போஷிக்கும் என் அணைப்பிற்கு வெளியே ஒருவரும் இல்லை.
இதுவரை பார்த்த குழந்தைகள்
அதற்கப்பாற்பட்டவை அனைத்தையும்
இச்சிறு சிரசில் கைவைத்து வாழ்த்துகிறேன்.
அத்தனை வாழ்க்கையும் இதோ செப்பமாயிற்று.
அன்பே! உன் பதம் இவ்வளவு இனிதா என
வைரமணி உலகு
ஒளிரும் பட்டைகளைத் திறக்கிறது.
யாருடைய குழந்தையோ
இந்தப் பேருந்து நெரிசலில்
என் மடியிலிருக்கிறது.
சில நிமிடங்களுக்குக் கிடைத்திருக்கிறது சீராட்டும் உரிமை.
மக்களே
என் நட்சத்திரங்களைத்தான்
உங்கள் வானத்திற்குக் கொடுத்திருக்கிறேன்.
ஒளியின் ஒரு ரேகை குறைந்தாலும்
நீங்கள்
பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.
என் பொக்கிஷங்களுக்கு உங்களையே
காவலாட்களாக நியமித்திருக்கிறேன்.
பாதுகாப்பாக வைத்திருங்கள்.
No comments:
Post a Comment