A POEM BY
MA.KALIDAS
the house lies disheveled.
Little baby sleeping with one hand dangling out
the other end of the cradle is not to be seen at all
this side and that side of the wall having just the window
the black smoke plays hide and seek.
Getting burnt along with those thrown up as unnecessary
Deluxe Ponni which would last for ten days
Through the broken glass
Ammaachi continues to bless
Through the window of the house
that has escaped the shelling
again and again seen on the
small screen newscast
father and mother ravaged utmost
The specs of ash stuck on my back
standing on the street
with the spinning top found amidst the ruins,
a Fellow orphan
dusts off softly.
அவசரப்பட்டுப் பாதி அழித்த
ஓவியம் போல்
உருக்குலைந்து கிடக்கிறது வீடு.
ஒரு கையை வெளியே தொங்கவிட்டபடி தூங்கிய குட்டிப் பாப்பா தொட்டிலின் மறுமுனை தென்படவேயில்லை.
வெறும் ஜன்னல் மட்டுமே
தாங்கிய சுவரின்
இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகக் கண்ணாமூச்சி ஆடுகிறது கரும்புகை. தேவையற்றதென
மேலே தூக்கி வீசியவற்றோடு
சேர்ந்து கருகுகிறது
பத்து நாள் பாட்டுக்குப் போதுமான
டீலக்ஸ் பொன்னி.
உடைந்த கண்ணாடிச் சில்லுக்குள்ளிருந்து இப்போதும் ஆசீர்வதிக்கிறாள் அம்மாச்சி.
"ஷெல்"லுக்குத் தப்பிய வீட்டின்
ஜன்னல் வழி
திரும்பத் திரும்ப செய்தியில் தோன்றுகிறார்கள், சிதைந்த அம்மாவும் அப்பாவும் சித்தப்பாவும். இடிபாடுகளுக்கிடையே
கண்டெடுத்த பம்பரத்தோடு
தெருவில் நிற்கும் என் முதுகில் ஒட்டிய சாம்பல் புழுதியை
வலிக்காமல் தட்டி விடுகிறான்
சக அனாதை.
- மா.காளிதாஸ்
No comments:
Post a Comment