INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 27, 2021

NEDUNTHEEVU NETHAMOHAN

 A POEM BY

NEDUNTHEEVU NETHAMOHAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

In the city where sun pours torrentially
I chanced to see your profusely sweating face.
Life’s burden unbearable has made almost its own
your face and figure of the teens.
In those days you would be exquisite
like the dewdrop falling on a white flower.
It was then I mused that
other than ransacking some humans
Times do nothing else.
I have absolutely forgotten the ritual of
enquiring after your well-being
As I looked at you intensely
You had come into my eyes.
With lips quivering
You spelt my name
I, desiring to hear your voice one more time
pretended not to hear it.
I thought to myself that the rancour
of those moments
should remain insatiate.
At that instant a male took you away.
Before calling you back
Having gone far away
You are waiting for the bus
under a tree-shade.
Wonder whether you know or not _
Waiting is Fire encircling us
lit by our own selves.

நிறைந்த வெய்யில் பெய்யும் நகரத்தில்
வியர்வைபெருக்காகி
இருந்த உன் முகத்தை
அனிச்சையாக காண நேர்ந்தது
உனது இளமைக்கால உருவத்தை
வாழ்வின் பெரும்சுமை பெரிதாகவே
தனதாக்கிக்கொண்டிருந்து
நீ அப்போதேல்லாம்
வெள்ளை மலரில் விழும் பனிபோல
அழகாய் இருப்பாய்
அப்போது நினைத்தேன்
காலங்கள்
சில மனிதர்களை சூறையாடுவதைத் தவிர
வேறேதுவும் செய்வதில்லை என
உன்னை நலம் விசாரிக்கும் சடங்கை
நான் மறந்தே விட்டேன்
உன்னை உற்றுப்பார்த்ததில் என் கண்களுக்குள்
நீ வந்துவிட்டது
உதடுகள் நடுங்கியவாறே
என் பெயரை உச்சரித்தாய் நீ
நானோ இன்னொருமுறை
உன்குரலைக் கேட்பதற்காய்
கேட்காதவன் போல் இருந்தேன்
அந்தக் கணங்களின் வன்மம் தீரக்கூடாதேன
நினைத்துக்கொண்டேன்
அந்தனொடி ஆணொருவன்
உன்னை வந்து அழைத்துச் சென்றான்
உன்னை திரும்ப அழைப்பதுக்குள்
நீ வெகு தூரத்துக்கு சென்று
ஒரு மர நிழலின்கிழ் பேருந்துக்காய்
காத்திருக்கிறாய்
உனக்கு தெரியுமோ தெரியாது
காத்திருத்தல் என்பது
நம்மைசுற்றி நாமே
வைத்துக்கொண்ட நெருப்பு.

-நேதா-





No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024