A POEM BY
MUJAHITH SHARIF (Maha)
He wrote words meant for him.
This snowfall that has turned the corners of dirt
into white
has not cleaned the gloom.
In all the chill-filled directions
the ink of poet unable to sleep
lies scattered
From the tales of leaves withered and falling
the silences of death surfaced.
Forever the poet’s longing is
for a noble poem
or a noble death.
ரசிகன்
இருளின் கூரான முனையிலிருந்து
தனக்கான வார்த்தைகளை எழுதிக்கொண்டான்
அழுக்கின் ஓரங்களை
வெள்ளையாக்கிய இந்தப்பனிப்பொழிவு
இருள்களை தூய்மைப்படுத்தவில்லை
பாதையின்
குளிர்நிரம்பிய திசைகளிலெல்லாம்
தூக்கம் தொலைத்த கவிஞனின்
பேனா மை சிதறிக்கிடக்கின்றது
காய்ந்து விழும் இலைகளின்
கதைகளிலிருந்து
மரணத்தின் மௌனங்கள் புலப்படலாயின
கவிஞனின் ஏக்கம் எப்போதுமே
நல்ல கவிதைக்கானது
அல்லது
நல்ல மரணத்திற்கானது
~
முஜாஹித் சரீப்
(மஹா)
No comments:
Post a Comment