INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 27, 2021

THAMIZHNATHY

 A POEM BY

THAMIZHNATHY

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Biological Clock stands bewildered
Day and night defined by it
have turned topsy-turvy
As if it has just heard
the departure of someone dear
It stands shell-shocked.
Sometimes the small hand runs chasing
the large hand.
At times one goes past another
circling in opposite directions.
Inside the head of biological clock
queries hundred abound
Why is she having midnight-baths?
Why sleeping during day and
staying awake at nights?
Why taking food at untimely hours?
Causing ill to her health
why is she sitting in front of the TV
Also
Why sun scorching at night?
Why the moon shines radiantly during day?
One day sitting leisurely
and spreading the day
in the manner of a sheet of paper
smoothening its wrinkles and crinkles
and straightening it
should make it understand that
in this land this is Night
and this is Day
Ere I do that
hope the biological clock
concludes not
that I have gone mad.

Thamizhnathy Nathy

உடற்கடிகாரத்துக்கு ஒன்றும் புரியவில்லை
அதனால் நிர்ணயிக்கப்பட்டிருந்த
இரவும் பகலும் குழம்பிவிட்டன.
நெருக்கமானவரது சாவுச்செய்தியை
அக்கணந்தான் செவியுற்றதுபோல
நின்ற இடத்திலேயே
திகைத்துப்போய் நிற்கிறது.
சிலசமயம் பெரிய முள்ளை சின்ன முள் துரத்திக்கொண்டோடுகிறது.
சமயங்களில் ஒன்றைத் தாண்டி மற்றொன்று
எதிரெதிர் திசைகளில் சுழல்கின்றன.
உடற்கடிகாரத்தின் தலைக்குள்
ஒரு நூறு கேள்விகள்
நள்ளிரவுகளில் இவள் எதற்குக் குளிக்கிறாள்?
பகலில் உறங்கி இரவில் ஏன் விழித்திருக்கிறாள்?
அகாலத்தில் உணவு உட்கொள்வது எதனால்?
ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொண்டு தொலைக்காட்சியின் முன் எதற்காக அமர்ந்திருக்கிறாள்?
மேலும்,
இரவில் ஏன் சூரியன் தகிக்கிறது?
பகலில் சந்திரன் ஒளிர்கிறது?
ஒருநாள் சாவகாசமாக உட்கார்ந்து
ஒரு தாளைப் போல நாளை நீட்டி விரித்து
கசங்கல் நீக்கி
இந்த நாட்டில்
'இதுதான் இரவு' 'இதுதான் பகல்'
என புரியவைத்துவிடவேண்டும்
அதற்குள்,
எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதென்ற
முடிவுக்கு
உடற்கடிகாரம்
வராதிருந்தால் போதும்!

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024