A POEM BY
K.MOHANARANGAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
DELIVERANCE
Giving her away to its ferocitythat grew all the more
whenever eyed intently
Erasing the intervening iron-bars
she freed the tiger of the painting.
Stretching and lifting its legs gone limp
shaking its fatigued body and rising
that which regained its original self
with a roar
turning and halting
gazing intently at her who stood there
frightened to draw closer
then
arrived at its jungle.
The same forest
where it had trodden all over
Yet
now everything seemed new.
Afflicted with the misfortune of
seeing those same fear-struck pair of eyes
again and again
in any and all prey
that it leapt and chased
Forgetting how to hunt
famished
it strays
crazy to the core.
க. மோகனரங்கன்
விடுதலை
______________
உற்றுக் காணும்தோறும்
உருவேறி நிற்குமதன்
உக்கிரத்திற்குத் தன்னை
ஒப்புக்கொடுத்தவளாக ,
குறுக்கே நின்ற
கூண்டுக்கம்பிகளை
அழித்து ,
அந்த சித்திரத்துப்புலியை
அவள் விடுவித்தாள் .
துவண்டிருந்த கால்களை
தூக்கி வைத்து
சோர்ந்த உடலை
உதறிச் சிலிர்த்து
ஒரு உறுமலோடு
தனது சுயத்திற்கு மீண்ட
அது ,
அருகில் வர
அஞ்சி நிற்குமவளை
திரும்பி நின்று
தீர்க்கமாக ஒருமுறை நோக்கியபின்
தனது வனத்திற்கு ஏகியது .
அடியளந்த
அதே காடுதான்
ஆயினும் ,
இம் முறை
எல்லாமும் புதிதாக இருந்தது .
ஒடித் துரத்திய இரை
ஒவ்வொன்றிலும்
மருண்ட அவ்விரு கண்களையே
மறுபடியும் மறுபடியும்
காண நேரிட்ட
துரதிர்ஷ்டத்தால்
வேட்டைமறந்து
பசிமுற்றி அது
பைத்தியமாய் திரிகிறது.
No comments:
Post a Comment