A POEM BY
SHANMUGAM SUBRAMANIAM
Each time I feel
a flower within
seems like someone hitherto not met in person
is close by.
To find out how many moments it would last
none by my side.
The pleasant coolness spreading in the hands
while prodding inside the water
when getting on the skin joyously
the daylight turning cozy warmth on the forehead
The day renouncing the shore
foaming with the roar
of the whirl and swirl of waves
not leaving the senses
in the voice heard intermittently
my name being chanted
and then fading and ceasing to be
keeps happening everyday.
Not paying attention to the course
of the wind
I suffer no loss
Which way the wind blows
who cares
Suffice
to feel the wind
all over my face.
Shanmugam Subramaniam
ஒவ்வொரு முறையும் மனதில்
பூவொன்றை உணர்கையில்
இதுவரை நேரில் சந்திக்காத ஒருவர்
சமீபத்திருப்பதாகப் படுகிறது
அது எத்தனை நொடிகள் நீடிக்கும் என்பதைக்
கேட்டறிய அருகில் ஒருவருமில்லை
நீருக்குள் துழாவும்போது கரங்களில் படரும் குளிர்மை
உடலேறிக் களிக்கையில்
நுதல்மீது சுகவெம்மையாகும் பகலொளி
அலைபுரளும் சப்தத்துடன் நுரைக்கும்
கரையைத் துறந்து சென்ற நாள்
புலனில் நீங்காதிருக்க
விட்டுவிட்டு கேட்கும் குரலில்
என்பெயர் உச்சரிக்கப்படுவதும்
பின்னர் சன்னமாகித் தொலைவதும்
தினம் நடைபெற்ற வண்ணமாக உள்ளது
காற்றின் போக்கை கவனியாதிருப்பதில்
இழப்பொன்றுமில்லை எனக்கு
எப்பக்கம் வீசினால் என்ன
காற்றினை முகமெங்கும் உணர்வதே போதுமானது.
- எஸ்.சண்முகம் -
No comments:
Post a Comment