INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, October 5, 2020

MA.KALIDAS'S POEM

 A POEM BY 

MA.KALIDAS


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


At first the balloon changes into a balloon.
the mouth that blows it
and turns it swollen.

The present need of the other end that
keeps under leash the desire flying infinitely
is wind intense not inhaled.

Though in clusters,
can there be pleasure in flying imprisoned in a tiny knot?

Aspects of malice that someone had unloaded
upon the untiring effort of
celebrating each day a grand festival
bursting, lie scattered all over the space.

Without flying bursting – nothing
some balloons not blown, turning rotten
O, what sort of a curse is this?

Despite being pricked by many sharp-tips
For whom does the globe-balloon fly
with all the love of the world
hanging suspended in the air?

For the angel bringing the wind of death
in the giant balloon
I have left the last line incomplete.



தன்னை உப்பிப் பெருக்க வைக்கும்
வாயை, முதலில்
பலூனாக மாற்றுகிறது பலூன்.

எல்லையில்லாமல் பறக்கும் ஆசையை இழுத்துப் பிடித்திருக்கும் மறுமுனையின் இப்போதைய தேவை
உள்வாங்கப்படாத பலத்த காற்று.

கூட்டமாக என்றாலும், சிறு முடிச்சில் கட்டுண்டு பறப்பதா சுகம்?

ஒவ்வொரு நாளையும்
திருவிழாவாக ஊதித் தள்ளும்
முனைப்பின் மீது, யாரோ இறக்கிய
பொச்சாப்பின் கூறுகள்
வெடித்துக் கிடக்கிறது வெளியெங்கும்.

பறத்தல், வெடித்தல் ஏதுமின்றி
ஊதப்படாமலே மட்குவது
சில பலூன்களின் எவ்வகை சாபம்?

எத்தனை கூர்முனைகள் துளைத்தும்
அவ்வளவு காதலோடு
யாருக்காக அந்தரத்தில் பறக்கிறது
பூமிப் பலூன்?

ராட்சஷ பலூனில்
மரணக் காற்றை ஏந்தி வரும் தேவதைக்காக, கடைசி வரியை
முடிக்காமலே வைத்திருக்கிறேன்.

மா.காளிதாஸ்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024