INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, October 5, 2020

SUNDAR NITHARSON'S POEM

 A POEM BY

SUNDAR NITHARSON

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
DARING TO DIE BY SUICIDE

Seeking and striving to become god
has always been there in me
as a childhood dream.
Aided by the cradle tales
That after death we can become gods
I try to die.
When the fear of death
churns the heart
for getting suggestions from god
for dying
I catch hold of he who strolls
Turning into god.
He shows me the ways to die
One by one.
Death can be something instant.
As his suggestions of ancient methods
are too painful
I think of a new way.
I ask him to die with me.
In the parallel iron rods of railway tracks
In one rod he
And in the other I
With hands clasped
Be buried under the old train
So I plan.
He was not afraid.
Isn’t he the Almighty!
As proposed, with clasped hands
we walk along as corpses…
with the sharp edges of the iron rods
in the manner of knife’s razor edges
cutting the legs
We hurry in search of Death.
The rail-tracks shudder
There the green demon
That too
is a demon of the archives.
Though God is familiar with Death
He also trembles and
narrates many a ‘once upon a time’ stories.
He pleads to have his hand freed
The demon touches my feet.
So as not to die
at the hands of usual demon
in the usual manner
and also
to show the one who strolls turning god
I rise above and fly with him.

தற்கொலைக்குத் துணிதல்
................................................
கடவுளாகும் முயற்சி
சிறுவயது கனவாய் எனக்குள்
இருக்கிறது.
மரணத்தின் பின்
கடவுளாகி விடலாம் என்ற
தொட்டில் கதைகளுடன்
மரணத்திற்கு முயற்சி செய்கிறேன்.
சாவின் பயம்
மனதை பிசைகையில்
சாவதற்கான ஆலோசனைகளை
பெற
கடவுளாகித் திரிபவரின்
கைகளை பற்றுகிறேன்.
மரணத்திற்கான வழிகளை
ஒவ்வொன்றாய் காட்டுகிறார்.
மரணம் நொடியில்
பிரசவிக்கக் கூடியதுதான்.
அவர் காட்டும்
பழம் வழிகளில்
வேதனை மிகுந்திருந்ததனால்
புதிய வழியை ஆலோசிக்கிறேன்.
என்னுடன் சேர்ந்து
அவரையும்
இறக்க சொல்கிறேன்..
சமாந்தர தண்டவாள கம்பிகளில்
ஒன்றில் நான்
மற்றையதில் அவர்
கைகளைக் கோர்த்து
புகை வண்டியின் அடியில்
புதைந்து போவோம் என
திட்டமிடுகிறேன்.
அவர்
பயப்படவில்லை.
அவர்தான் கடவுளாயிற்றே!
திட்டப்படி
பிணைத்த கைகளுடன்
பிணமாக நடக்கிறோம்..
கம்பிகளின் விளிம்புகள்
கத்தி விளிம்புகளாய்
கால்களை அறுக்க
சா தேடி விரைகிறோம்..
தண்டவாளம் தடதடக்கிறது..
அதோ அந்த பச்சை பூதம்
அதுவும்
மிகப்பழைய பூதம்..
கடவுள்
மரணத்தில் பரீட்சயம்
இருந்தும் உதறி நடுங்குகிறார்.
பழைய பழைய கதைகளை
கூறுகிறார்.
பிடியை விடுவிக்க
கெஞ்சுகிறார்.
பூதம் காலடியைத் தொடுகிறது.
எனக்கு
பழைய பூதத்தினால்
பழக்கப்பட்ட விதத்தில்
மரணம் வரக்கூடாது என்பதற்காகவும்,
கடவுளாகித் திரிபவருக்கு
புதுமை மரணத்தைக்
காண்பிப்பதற்காகவும்
உயரக் கிளம்பி
அவருடன் பறக்கிறேன்..

சுந்தர் நிதர்சன்

Rajaji Rajagopalan, Mullai Amuthan and 15 others
2 Comments
Like
Comment
Share

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024