A POEM BY
the butterflies beautifying the sky
embracing the dew-specs
flutter in sun bath
to dry their feathers.
The streaks of clouds that grow
drinking specs of water
without branching out
remain sleeping for a few moments
in the transient grand space.
In the twilight sky enhancing beauty enhanced multifold
wearing the attire of hues and shades
The cloud-blossoms move around
due to the Wind’s strides.
When the birds that share the pristine sky
and flutter high
adorn the atmosphere with dark yellowish shade
at the rim of the great grand space
sprouts and swells
the myriad-hued rainbow.
Mohamed Noufal Mohamedthamby
பல்வர்ணம் கலந்த வானவில்
காற்றுச் சகதியில் சிக்கியவாறு
வானை அழகுபடுத்தும் பட்டாம்பூச்சிகள்
பனித்திவலைகளை அரவணைத்து
சூரியக் குளியலில் சிறகடிக்கின்றன
தம் சிறகுகளை உலர்த்துவதற்கு...
நீர்த்திவலைகள் குடித்து வளரும்
முகில் கீற்றுக்கள் கிளை பிரியாமல்
சில கணங்களுக்கு உறங்கி கொண்டிருக்கின்றன
நிலையற்ற பெருவெளியில்...
பேரழகாக்கிடும் அந்தி வானில்
நிறங்களெனும் உடையணிந்து
மேகப் பூக்கள் வலசை போகின்றன
காற்றின் நடமாட்டத்தால்...
நிர்மலமான ஆகாயத்தை
பகிர்ந்து சிறகடிக்கும் பட்சிகள்
வானை அடர் மஞ்சள் நிறத்தால்
அலங்கரிக்கையில்
பெரு வெளியின் கோடியில்
வளரத் தொடங்குகிறது
பல்வர்ணம் கலந்த வானவில்...
000
No comments:
Post a Comment