TWO POEMS BY
NESAMIGU RAJAKUMARAN
the sky of birds?
Why have we lost
the flutter of wings?
The ‘Keechaang kuruvigal'waking up the married ones
in the well of night _
Where would they be crouching asleep now?
The ‘Jaamakozhi' sounding clock-like
every ‘Jaamam’
in which Jaamam they got buried deep?
The ‘Akkaakkuruvigal' that foretell
the onset of water-flow in the river _
Where would they be huddled now?
Do you remember the ‘Oomaikottaangal'
blocking our way
emitting frightening shrieks
in those deserted roads
on pitch-dark nights
where we walked along?
The scenes of those shepherds
knowing if ‘Andril' birds were to cry
late in sunset hours
it would rain
ending the grazing and
getting ready to return home
_ Alas why those scenes
are no more seen?
The ‘Aatkaati' birds of night hours
instinctively learning someone
coming at a distance
and cautioning those guarding the fields
O do we know which way
they’ve flown away?
Replicating human voice
the 'Senkaal Naarai' birds
called 'Koozhaikadaa'
_ O, where have they disappeared?
In a world sans humans
birds can thrive
But in a world sans birds
humans can’t survive
How many of us at all know this
Ecological premise.
That
where no
'Kallukkuruvigal'
'Karichaangkuruvigal'
'Chittukkuruvigal'
'Marangkothigal'
fly
is but
faulty sky
If only you and I
bequeath this knowledge
to the next generation
The earth can heave a sigh of relief!
Sky’s distress
would somewhat ease.
சிறகுத்திணை!
-எஸ்.ராஜகுமாரன்
எங்கு தொலைத்தோம்
பறவைகளின் வானத்தை?
ஏன் இழந்தோம்
சிறகுகளின் ஓசையை?
மூன்றாம் ஜாமத்தில்
சம்சாரிகளை துயில் எழுப்பும்
கீச்சாங்குருவிகள்
எங்கு படுத்துறங்கும்
இப்போது?
ஒவ்வொரு ஜாமத்துக்கும்
கடிகார ஒலி எழுப்பும்
ஜாமக்கோழிகள்
புதைந்த ஜாமம் எது?
ஆற்றில் தண்ணீர் வருவதை
முன் கூட்டியே அறிவிக்கும்
அக்கா குருவிகள்
எத்திசையில் முடங்கி இருக்கும்?
விளக்கற்ற இரவுகளில்
நாம் நடந்த
அரவமற்ற சாலைகளில்
அச்சக்குரல் எழுப்பி
வழிமறித்த
ஊமைக்கோட்டான்களை
நினைவிருக்கிறதா
உங்களுக்கு?
பின் அந்திப்பொழுதுகளில்
அன்றில்கள் கரைந்தால்
மழை வருமென்பதை அறியும்
கால்நடை மேய்ப்பர்கள்
மேய்ச்சலை முடித்து
வீடு திரும்ப
ஆயத்தமாகும் காட்சிகள்
ஏன் காணாமல் போயின?
தூரத்தில் ஆள் வருவதை அறிந்து
வயற்காவலரை எச்சரிக்கும்
இரவுநேர ஆள்காட்டிப்பறவைகள்
பறந்த திசை எதுவென
அறிவோமா நாம்?
மனிதக் குரல்களை
நகல்ஒலி எழுப்பும்
கூழைக்கடா என்னும்
செங்கால் நாரைகள்
சென்று மறைந்ததெங்கே?
மனிதர்கள் இல்லாத உலகில்
பறவைகள் வாழ்ந்துவிடும்-
ஆனால் பறவைகள் இல்லாத உலகில்
மனிதர்கள் வாழ இயலாது என்னும்
சூழலியல் சூத்திரம் அறிந்தோர்
நம்மில் எத்தனை பேர்?
கல்லுக்குருவிகளும்
கரிச்சான் குஞ்சுகளும்
சிட்டுக்குருவிகளும்
மரங்கொத்திகளும்
பறக்காத ஆகாயம்
பழுதான ஆகாயம் என்பதை
அடுத்த தலைமுறையிடம்
நாம் அறியக் கொடுத்தால்தான்
பூமி கொஞ்சம்
நிம்மதிப் பெருமூச்சு விடும்!
ஆகாயத்தின் பதட்டம்
சற்றே தணியும்!
2.CHILDHOOD
When I ask the child that smears the red ink all over its palm
Why are you doing so
Oh, the ink is spilt says she
and laughs.
Another time
for the blue- ink smeared
handkerchief also
the same smile
with the same smile as response.
Once I observed her
shaking her ink-filler
over a page in a notebook
thrown open.
When closing the notebook and reopening it
an abstract painting was drawn
on both sides
as mirror image.
‘See here two lookalike birds’
said she.
Is it that the children like
to scatter colours
all over or
the colours love to spread out on their own
in objects meant for children.
* TRANSLATOR'S NOTE: குழந்தை மை என்று தலைப்பிலேயே மை என்ற ஒற்றையெழுத்துச் சொல்லைக் கொண்டிருக்கிறது கவிதை. குழந்தைமைப் பருவத்தில் உள்ள சிறுமி மையைச் சிதறடிக்கிறாள், உள்ளங்கையில் அப்பிக்கொள்கிறாள். மை மூலக்கவிதையில் இருவிதமாக இடம்பெறும் அளவில் ஆங்கிலத்தில் எனக்குத் தெரிந்தவரை எந்தவொரு வார்த்தையும் இல்லை. IN(K)FANCY என்று தலைப்பிட்டுப் பார்த்தேன். குழந்தைமையில் உள்ள மை போல் இயல்பாக இல்லை. தவிர, infancy என்பது குழந்தைப்பருவத்தின் மிக ஆரம்பக் கட்டம். எனவே அந்த வார்த்தையைத் தலைப்பாக்குதல் சரியல்ல என்று தோன்றியது. மூலகவிதையில் வரும் மை என்ற சொல்லின் செறிவை ஓரங்கட்டி கவிதையை மொழிபெயர்ப்பது சரியா என்ற கிலேசம் வேறு. ஆனாலும், கவிதை பிடித்ததால் கவிஞர் கோபித்துக்கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில் ‘மை கொட்டிவிட்டதாய் மனதை சமாதானம் செய்துகொண்டு’ கவிதையின் சாரத்தை ஓரளவுக்குத் தருமளவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளேன். தோழமையுடன் லதா ராமகிருஷ்ணன்.
2. குழந்தை மை
உள்ளங்கைகளெங்கும்
சிவப்பு மையை
அப்பிக்கொள்ளும் குழந்தையிடம்
ஏன் இப்படிச் செய்கிறாய்
எனக் கேட்கையில்
மை கொட்டிடுச்சு என்று
சொல்லிச் சிரிக்கிறாள்.
பிறிதொரு முறை
நீல மை கொட்டிய கைக்குட்டைப் பற்றியும்
அதே காரணத்துடனான
பொய்ச்சிரிப்பே பதிலாக.
திறந்த நோட்டுப்புத்தகத்தின்
ஒரு பக்கத்தில் அவள்
மை உறிஞ்சியால் வீசுவதை கவனித்தேன் ஒரு சமயம்.
நோட்டை மூடித் திறக்கையில்
அரூப ஓவியமொன்று
இரண்டு பக்கத்திலும் ஒரேபோல் தீட்டப்பட்டிருந்தது.
ஒரே மாதிரி ரெண்டு பறவை பாத்தியா என்றாள்.
வண்ணங்களை வாரி இறைக்க
குழந்தைகளுக்குப் பிடிக்குமா? இல்லை குழந்தைகளுக்கான பொருட்களில் தம்மை இறைத்துக்கொள்ள
வண்ணங்களுக்குப் பிடிக்குமா.
No comments:
Post a Comment